Andavanai theriyaadhu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Andavanai theriyaadhu unnai theriyum
aanmeegam theriyaadhu un anbai theriyum
aanandha kaatre unnul amizha theriyum - en
aanmaavai unnai anri yaarkku puriyum
thaayundhan madiyil saayndhu uranga theriyum
thandhai un aanaikkellaam adanga theriyum
seyaaga unnai alli konja theriyum
sindhikka vaikkum pechchil silirkka theriyum
aatti vaikkum asaivukkisaindhu aada theriyum
paattuviththaal ninnarul viyandhe paada theriyum
koottuvikkum maandhargalodu kulava theriyum
kuzhaiviththaal negizhndhu negizhndhu azhave theriyum
kaattuvikkum thisaiyil thaane poga theriyum
kaanbikkum muththiragalile kadavulai theriyum
naattuvikkum kolgaigal patri nadakka theriyum
nagarththuginra kaayaay thaane nagara theriyum
ootti vidum amudham thaane unna theriyum - en
ullaththin pasi unaiyanri yaarkku theriyum
ookkuginra paadhaiyile munnera theriyum - nee
uyarththi vitta vaazhvai enni uruga theriyum
naamam solli azhaikka thaane enakku theriyum - en
yoga kshemam kaappadharku unakke theriyum
undhan mugam arimugamenru enakku theriyum - namakkul
ulla bandham ennavenru unakke theriyum
malaiyininrum kudhiyenraalum kudhikka theriyum - ennai
manadhu vaiththu kaappadharku unakke theriyum
silayai pol nil enraalum nirka theriyum - en
sindhanaiyul needhaan enru unakke theriyum
yandhiram pol suzhala thaane enakku theriyum - ennai
iyakki vaikkum sootchumam mattum unakke theriyum
maayaiyile aazhaththaane enakku theriyum - ennai
manidhanaakki vaazha vaikka unakke theriyum
nenjukkul undhan kuralai ketka theriyun - en
ninaivugalai kavidhaiyaakka unakke theiyum
vaazhvukku nee aadhaaram enru theriyum - indha
vaiyaththil unnaiyanri yaarai theriyum
ஆண்டவனைத் தெரியாது உன்னைத் தெரியும்
ஆன்மீகம் தெரியாது உன் அன்பைத் தெரியும்
ஆனந்தக் காற்றே உன்னுள் அமிழத் தெரியும் - என்
ஆன்மாவை உன்னையன்றி யார்க்குப் புரியும்
தாயுந்தன் மடியில் சாய்ந்து உறங்கத் தெரியும்
தந்தை உன் ஆணைக்கெல்லாம் அடங்கத் தெரியும்
சேயாக உன்னை அள்ளிக் கொஞ்சத் தெரியும்
சிந்திக்க வைக்கும் பேச்சில் சிலிர்க்கத் தெரியும்
ஆட்டி வைக்கும் அசைவுக்கிசைந்து ஆடத் தெரியும்
பாட்டுவித்தால் நின்னருள் வியந்தே பாடத் தெரியும்
கூட்டுவிக்கும் மாந்தர்களோடு குலவத் தெரியும்
குழைவித்தால் நெகிழ்ந்து நெகிழ்ந்து அழவே தெரியும்
காட்டுவிக்கும் திசையில் தானே போகத் தெரியும்
காண்பிக்கும் முத்திரைகளிலே கடவுளைத் தெரியும்
நாட்டுவிக்கும் கொள்கைகள் பற்றி நடக்கத் தெரியும்
நகர்த்துகின்ற காயாய்த் தானே நகரத் தெரியும்
ஊட்டிவிடும் அமுதம் தானே உண்ணத் தெரியும் - என்
உள்ளத்தின் பசி உனையன்றி யார்க்குத் தெரியும்
ஊக்குகின்ற பாதையிலே முன்னேறத் தெரியும் - நீ
உயர்த்திவிட்ட வாழ்வை எண்ணி உருகத் தெரியும்
நாமம் சொல்லி அழைக்கத் தானே எனக்குத் தெரியும் - என்
யோக க்ஷேமம் காப்பதற்கு உனக்கே தெரியும்
உந்தன் முகம் அறிமுகமென்று எனக்குத் தெரியும் - நமக்குள்
உள்ள பந்தம் என்னவென்று உனக்கே தெரியும்
மலையினின்றும் குதியென்றாலும் குதிக்கத் தெரியும் - என்னை
மனது வைத்து காப்பதற்கு உனக்கே தெரியும்
சிலையைப் போல் நில் என்றாலும் நிற்கத் தெரியும் - என்
சிந்தனையுள் நீ தானென்று உனக்கே தெரியும்
எந்திரம் போல் சுழலத்தானே எனக்குத் தெரியும் - என்னை
இயக்கி வைக்கும் சூட்சுமம் மட்டும் உனக்கே தெரியும்
மாயையிலே ஆழத்தானே எனக்குத் தெரியும் - என்னை
மனிதனாக்கி வாழ வைக்க உனக்கே தெரியும்
நெஞ்சுக்குள் உந்தன் குரலைக் கேட்கத் தெரியும் - என்
நினைவுகளைக் கவிதையாக்க உனக்கே தெரியும்
வாழ்வுக்கு நீ ஆதாரம் என்று தெரியும் - இந்த
வையத்தில் உன்னையன்றி யாரைத் தெரியும்
Comments