Anbum panbum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbum panbum kanngalaaga
vaazha enrum maravaadhe
analil padinum vaaymai ennum
ariya gunaththai thuravaadhe
thandhu thandhu magizhvu kollum
thanmai vendum yosiyaadhe
thanakku thanakku ennum ennam
[nee] eththarunamum anumadhiyaadhe
kanngal kanda vazhiyil sellum
katti podu vittidaadhe
kallam seyya kaigal nagarum
vetti podu anjidaadhe
muruga muruga enravan padham
thazhuva enrum pirazhaadhe
karudha iyalaa perum kadavul
Sivashankaram idhai maravadhe
அன்பும் பண்பும் கண்களாக வாழ என்றும் மறவாதே
அனலில் படினும் வாய்மை என்னும் அரிய குணத்தை துறவாதே
தந்து தந்து மகிழ்வு கொள்ளும் தன்மை வேண்டும் யோசியாதே
தனக்கு தனக்கு என்னும் எண்ணம் [நீ] எத்தருணமும் அனுமதியாதே
கண்கள் கண்ட வழியில் செல்லும் கட்டி போடு விட்டிடாதே
கள்ளம் செய்ய கைகள் நகரும் வெட்டி போடு அஞ்சிடாதே
முருகா முருகா என்றவன் பதம் தழுவ என்றும் பிறழாதே
கருத இயலா பெரும் கடவுள் சிவசங்கரம் இதை மறவாதே
Comments