top of page

Anbukkor ilakkanamaam

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Anbukkor ilakkanamaam

anandha ilakkiyamaam

than pakkam ninrorai

thazhuvuginra kaaviyamaam


kann paarkka kurai theerum

kai theenda vinai oadum

kaal patta podi poosa

kadu noyum parandhidumaam


paasathin uraividamaam

panbinile nirakudamaam

oasaiyinri pirar thuyargal

ozhikkinra irai gunamaam


gunathil uyar imayamivan

koodum suvai senthamizhan

manathil uyar malligayaan

maraiyil uyar saamam ivan


ezhu piravi thodar karumam

vizhimunayil viratta vandhaan

pazhipaavam seidhorum - siva

padhavi pera vazhi uraithaan


suzhu munaiyil nirkumivan

sootchumathai unarthi vittaan

kazhumunaiyil ninraalum

kaappatra vandhiduvaan


Siva Shankar ivaridame

thavam seidheer neer vandheer

kavalai ellaam ozhindhiduveer

kalippinile midhandhiduveer


nalanellaam adandhiduveer

naadu potrum nilai kaanbeer

kulam kalvi selvam uyara

kodi kodiyaay vaazhveer


அன்புக்கோர் இலக்கணமாம் ஆனந்த இலக்கியமாம்

தன் பக்கம் நின்றோரைத் தழுவுகின்ற காவியமாம்

கண் பார்க்கக் குறை தீரும் கை தீண்ட வினை ஓடும்

கால்பட்ட பொடி பூச கடுநோயும் பறந்திடுமாம்


பாசத்தின் உறைவிடமாம் பண்பினிலே நிறைகுடமாம்

ஓசையின்றி பிறர் துயர்கள் ஒழிக்கின்ற இறைகுணமாம்

குணத்தில் உயர் இமயமிவன் கூடும் சுவை செந்தமிழன்

மனத்திலுயர் மல்லிகையான் மறையில் உயர் சாமம் இவன்


எழுபிறவி தொடர் கருமம் விழிமுனையில் விரட்ட வந்தான்

பழிபாவம் செய்தோரும் சிவ பதவிபெற வழி உரைத்தான்

சுழுமுனையில் நிற்குமிவன் சூட்சுமத்தை உணர்த்தி விட்டான்

கழுமுனையில் நின்றலும் காப்பாற்ற வந்திடுவான்


சிவசங்கர் இவரிடமே தவம் செய்தீர் நீர் வந்தீர்

கவலையெல்லாம் ஒழிந்திடுவீர் களிப்பினிலே மிதந்திடுவீர்

நலனெல்லாம் அடைந்திடுவீர் நாடுபோற்றும் நிலை காண்பீர்

குலம் கல்வி செல்வம் உயர கோடி கோடியாய் வாழ்வீர்

 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page