Anbu vidhaiyai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbu vidhaiyai ulagile thoovi
aruvadai seibavan yaaradiyo
aanandha jothi annaamlaiyaan
aiyan Sivashankar thaanadiyo
inbaththin vaasalil yeri nillaa
yezhai mukam paarkka solladiyo
eegaikkoru avadhaaram seydhaan
ellaam tharuvaan nee keladiyo
ullaththin ulle olindhirukkum - avan
uruvai kaatida solladiyo - mana
oonangal yaavum agatri vittaal - adhan
ulle therivaan nee paaradiyo
engum edhilum avan mugame
indha adhisayam yenadiyo
yekaantha vaasanaay koyil kondaan
yezhumalaiyaan ivanadiyo
ottiya sondham ivaneyenum
ulle oru kural keladiyo
oadi vandhanaikkum balaganaay - un
ullam ninaippadhu dhaanadiyo
kanrai pirindha pasuvai polullam
kadhari thavippadhu yenadiyo - anru
kandu maagizhndha kaatchi onru - un
kannukkul nirpadhu dhaanadiyo
killi vittennai azhavum vittaan - indha
kindal vendaamenru solladiyo
azhudha kuzhandhaidhaan paal kudikkum
aadhaaramaam kadhai keladiyo
aanandha kadal alaigalile manam
amizhndhu thinaruvadhenadiyo
dhaanandha kannane enruraiththa
thaalgal thandha varam thaanadiyo
அன்பு விதையை உலகிலே தூவி
அறுவடை செய்பவன் யாரடியோ
ஆனந்த ஜோதி அண்ணாமலையான்
ஐயன் சிவ சிவசங்கர் தானடியோ
இன்பத்தின் வாசலில் ஏறி நில்லா
ஏழை முகம் பார்க்க சொல்லடியோ
ஈகைக்கொரு அவதாரம் செய்தான்
எல்லாம் தருவான் நீ கேளடியோ
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் - அவன்
உருவை காட்டிடச் சொல்லடியோ - மன
ஊனங்கள் யாவும் அகற்றி விட்டால் - அதன்
உள்ளே தெரிவான் நீ பாரடியோ
எங்கும் எதிலும் அவன் முகமே
இந்த அதிசயம் என்னடியோ
ஏகாந்த வாசனாய்க் கோயில் கொண்டான்
ஏழுமலையான் இவனடியோ
ஒட்டிய சொந்தம் இவனே எனும்
உள்ளே ஒரு குரல் கேளடியோ
ஓடி வந்தணைக்கும் பாலகனாய் - உன்
உள்ளம் நினைப்பது தானடியோ
கன்றைப் பிரிந்த பசுவைப் போலுள்ளம்
கதறித் தவிப்பது ஏனடியோ - அன்று
கண்டு மகிழ்ந்த காட்சி ஒன்று - உன்
கண்ணுக்குள் நிற்பது தானடியோ
கிள்ளி விட்டென்னை அழவும் விட்டான் - இந்த
கிண்டல் வேண்டாமென்று சொல்லடியோ
அழுத குழந்தைதான் பால் குடிக்கும்
அதாரமாம் கதை கேளடியோ
ஆனந்தக் கடல் அலைகளிலே மனம்
அமிழ்ந்து திணருவதேனடியோ
தானந்தக் கண்ணனே என்றுரைத்த
தாள்கள் தந்த வரம் தானடியோ
Comentários