top of page

Anbu vedham

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 2 min read

Anbu vedham oadha vandhu anbu vedhamaayirundhu

anbu naadhan aagi ninra Shankara

anbu geetham paada vandhu anbu geethamaayirundhu

anbu dhevan aagi ninra Shankara


inba vedham oadha vandhu inba vedhamaayirundhu

inba naadhan aagi ninra Shankara

inba geetham paada vandhu inba geethamaayirundhu

inba dhevanaagi ninra Shankaara


vandu thenai naadi vandhu inba gaanam paaduginra

sendumaalai sooduginra Shankara

sanda maarudhangal kooda thenralaagum vannam

krishna thandhirangal seyyum engal Shankara


thondu poojai enru koori thondu vaazhvu vaazha vandhu

thondar naadhan aagi ninra Shankara

undu dheivam enbavarkkum illai dheivam enbavarkkum

kanda podhu kaandhamaagum Shankara


vandhadhedhu senradhedhu enrum naanirundha podhu

enru sangam oodhuginra Shankara

andhamedhu aadhiyedhu bandhamedhu enra podhum

engal sondham allavo nee Shankara


anjuginra maandharukku nenju thandhu nenju yaavum

anbu thandhu aadharikkum Shankara

thanjam enra pergalukkul minji ninra paava moottai

panju pol paraththum engal Shankara


angenaadhu ingenaadhu engumaay niraindha jodhi

ponguginra boomi neeye Shankara

thangum mona saagaraththil angamaagi naangal vaazha

vangam oaram thangi vaazhum Shankara


vangamoram thangi vaazhum Shankara

engal annai thandhai neeye Shankara

ennul aaviyaagi ulla Shankara


vennilaavil thonruginra Shankara

engumaay niraindha jothi Shankara

engalodu naangalaana Shankara



அன்பு வேதம் ஓத வந்து அன்பு வேதமாயிருந்து

அன்பு நாதன் ஆகி நின்ற சங்கரா

அன்பு கீதம் பாட வந்து அன்பு கீதமாயிருந்து

அன்பு தேவன் ஆகி நின்ற சங்கரா


இன்ப வேதம் ஓத வந்து இன்ப வேதமாயிருந்து

இன்ப நாதன் ஆகி நின்ற சங்கரா

இன்ப கீதம் பாட வந்து இன்ப கீதமாயிருந்து

இன்ப தேவன் ஆகி நின்ற சங்கரா


வண்டு தேனை நாடி வந்து இன்ப கானம் பாடுகின்ற

செண்டு மாலை சூடுகின்ற சங்கரா

சண்ட மாருதங்கள் கூட தென்றலாகும் வண்ணம்

க்ருஷ்ண தந்திரங்கள் செய்யுமெங்கள் சங்கரா


தொண்டு பூஜை என்று கூறி தொண்டு வாழ்வு வாழ வந்து

தொண்டர் நாதன் ஆகி நின்ற சங்கரா

உண்டு தெய்வம் என்பவர்க்கும் இல்லை தெய்வம் என்பவர்க்கும்

கண்ட போது காந்தமாகும் சங்கரா


வந்ததேது சென்றதேது என்றும் நானிருந்த போது

என்று சங்கம் ஊதுகின்ற சங்கரா

அந்தமேது ஆதியேது பந்தமேது என்ற போதும்

எங்கள் சொந்தம் அல்லவோ நீ சங்கரா


அஞ்சுகின்ற மாந்தருக்கு நெஞ்சு தந்து நெஞ்சு யாவும்

அன்பு தந்து ஆதரிக்கும் சங்கரா

தஞ்சம் என்ற பேர்களுக்குள் மிஞ்சி நின்ற பாவ மூட்டை

பஞ்சுபோல் பரத்துமெங்கள் சங்கரா


அங்கெனாது இங்கெனாது எங்குமாய் நிறைந்த ஜோதி

பொங்குகின்ற பூமி நீயே சங்கரா

தங்கும் மோன சாகரத்தில் அங்கமாகி நாங்கள் வாழ

வங்கம் ஓரம் தங்கி வாழும் சங்கரா


வங்கமோரம் தங்கி வாழும் சங்கரா

எங்கள் அன்னை தந்தை நீயே சங்கரா

என்னுள் ஆவியாகி உள்ள சங்கரா


வெண்ணிலாவில் தோன்றுகின்ற சஙகரா

எங்குமாய் நிறைந்த ஜோதி சங்கரா

எங்களோடு நாங்களான சங்கரா




 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page