Anbu Seyya
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அன்பு செய்ய யாருமில்லை என்றேன்
ஆதரவாய் எனை வருடி நின்றான்
அமைதி நெஞ்சில் சிறிதுமில்லை என்றேன்-உன்
ஆனந்தமே நான்தானே என்றான்
வறுமையிலே வாடுவதை சொன்னேன்
வளமான புது வாழ்வை தந்தான்
சிறுமை செய்தார்களென அழுதேன்-அதை
பெருமையாய் மாற்றிடுவேன் என்றான்
தென்பென்னில் போனதென சொன்னேன்
தேவ அமுதம் தந்து பலம் தந்தான்
தெய்வ பக்தி தெரியாது என்றேன்
தேவையில்லை என்னை நம்பு என்றான்
பந்தம் என்னை இழுக்குதென புகன்றேன்
பாசமெல்லாம் ஒழித்துவிடு என்றான்
வந்தேன் எங்கு போவதென கேட்டேன்
வழிகாட்டி கூட்டி செல்வேன் என்றான்
மனம் அலை பாயுதென சொன்னேன்-ஒரு
சிலை போல ஆகிவிடு என்றான்
கலை ஏதும் கற்றதில்லை என்றேன்-ஒரு
கவிதை சொல்வேன் எழுது என சொன்னான்
அந்தகார இருள்தனிலே நின்றேன்
அபயகரம் உயர்த்தி அருள் தந்தான்-ஏதும்
குந்தகங்கள் வருமோ என பயந்தேன்-எனை
கூப்பிடு நான் பார்த்துக் கொள்வேன் என்றான்
Comments