top of page

Anbu manakkinra

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Anbu manakkinra koyiladi

aanandha kummi adiyungadi - pudhu

thenbu pirandhu malarumadi - engal

dhevanin aasi kidaikkumadi


vennai thirudiya kannanivan - thiru

venkadam aalginra mannanivan

kannai imaiyena kaakka vandhaan - than

kazhalgalile namai serkka vandhaan


dheva thoodhanaaga vandhaanivan - anbai

thekkiya vizhigal kondaanivan - nam

thevaigal yaavaiyum thandhaanivan - thannai

thedi vandhaar pakkal ninraanivan


thava payanai alli tharuginravan

thanakkena yedhum marukkinravan

siva pazhamaay kannil thonruginraan - than

sirippile muthukkal poonuginraan


pechile thathuvam poothirukkum - kann

veechile arul surandhirukkum

moochilum anbu kalandhirukkum - kann

munne ith dheivam koluvirukkum


chennai nagar seidha baakkiyame - kaal

sindhidum mannaale saaththiyame - engal

thennavanin arul rajjiyame - idhai

thedi varaadhavar poojjiyame



அன்பு மணக்கின்ற கோயிலடி

ஆனந்த கும்மி அடியுங்கடி - புது

தென்பு பிறந்து மலருமடி - எங்கள்

தேவனின் ஆசி கிடைக்குமடி


வெண்ணை திருடிய கண்ணனிவன் - திரு

வேங்கடம் ஆள்கின்ற மன்னனிவன்

கண்ணை இமையென காக்க வந்தான் - தன்

கழல்களிலே நமை சேர்க்க வந்தான்


தேவ தூதனாக வந்தானிவன் - அன்பை

தேக்கிய விழிகள் கொண்டானிவன் - நம்

தேவைகள் யாவையும் தந்தானிவன் - தன்னை

தேடி வந்தார் பக்கல் நின்றானிவன்


தவப்பயனை அள்ளி தருகின்றவன்

தனக்கென ஏதும் மறுக்கின்றவன்

சிவப்பழமாய் கண்ணில் தோன்றுகின்றான் - தன்

சிரிப்பிலே முத்துக்கள் பூணுகின்றான்


பேச்சிலே தத்துவம் பூத்திருக்கும் - கண்

வீச்சிலே அருள் சுரந்திருக்கும்

மூச்சிலும் அன்பு கலந்திருக்கும் - கண்

முன்னே இத்தெய்வம் கொலுவிருக்கும்


சென்னை நகர் செய்த பாக்கியமே - கால்

சிந்திடும் மண்ணாலே சாத்தியமே - எங்கள்

தென்னவனின் அருள் ராஜ்ஜியமே - இதை

தேடி வராதவர் பூஜ்ஜியமே


 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page