Anbu ennum sol
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbu ennum sol unnaal arththam purindhadhu - andha
aanandha maa mazhaiyaal idhayam thinarudhu
inbamennum sangadhiyai isaikkinradhu
eerezhulagum charanam charanam charanam enradhu
otrumai vidhai ulagellaam thoovi varugudhu
oangi valarum aala maramaay vizhudhu padarudhu
matravarkku thuyarenraal manadhu padharudhu - adhan
magaththuvamum inru dhaane puriya varugudhu
thaviththirundha idhayamellaam dhaagam thaniyudhu
thanimai enra unarvin suvadu inge azhiyudhu
mannum vinnum kai kulukki varaverkudhu - un
madham jaadhi enra solle marandhu ponadhu
அன்பு என்னும் சொல் உன்னால் அர்த்தம் புரிந்தது - அந்த
ஆனந்த மா மழையால் இதயம் திணறுது
இன்பமென்னும் சங்கதியை இசைக்கின்றது
ஈரேழுலகும் சரணம் சரணம் சரணம் என்றது
ஒற்றுமை விதை உலகெல்லாம் தூவி வருகுது
ஓங்கி வளரும் ஆல மரமாய் விழுது படருது
மற்றவர்க்கு துயரென்றால் மனது பதறுது - அதன்
மகத்துவமும் இன்று தானே புரிய வருகுது
தவித்திருந்த இதயமெல்லாம் தாகம் தணியுது
தனிமை என்ற உணர்வின் சுவடு இங்கே அழியுது
மண்ணும் விண்ணும் கை குலுக்கி வரவேற்குது - உன்
மதம் ஜாதி என்ற சொல்லே மறந்து போனது
Comentarios