Anbu Ennum pudhu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அன்பு என்னும் புது வேதம் - எங்கள்
ஐயன் தந்த நவ நீதம்
தென்பு தரும் ஜீவ நாதம்
தெய்வத்தின் அருட் ப்ரசாதம்
தருணமறிந்து நம் வாழ்வில்
தரத்தை உயர்த்த வந்த செல்வம்
அருணனுள் முகம் தெரிந்தான் - அவன்
ஆசி செய்தளித்த போதம்
கண்ணில் புத்தொளியை கூட்டும்
கருத்தில் ஒற்றுமையை நாட்டும்
எண்ணிலடங்காத மகிழ்வில்
இதயம் புது வேகம் காட்டும்
பகைகளை நெஞ்சம் மறக்கும்
பாசக் கடலிலே மிதக்கும்
சஞ்சலம் யாவும் போக்கும்
சமதர்ம நீதி ஆக்கும்
Comments