Anbinaal Aagaadhadhillai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அன்பினால் ஆகாததில்லை - அந்த
ஆனந்தத்திற்கேது எல்லை
என்பையும் பிறர்க்கெனவே அளிக்கும்
ஏங்குவோர் துணையாகி களிக்கும்
பண்பு பிறந்து உள்ளொளி கூட்டும்
பார்வை ஜீவ நாதம் மீட்டும்
எனதெனதென்னும் எண்ணம் ஓட்டும்
ஏழுலகும் உன் சொந்தமாய் காட்டும்
சிந்தை இறையோடு ஒன்றிட ஓடும்
சிவசங்கர் பதம் நெஞ்சில் ஆடும்
தந்த அன்பு பலகோடியாய் திரும்பும்
தாரணி உன்வழி தொடரவே விரும்பும்
Comments