Anbe thanadhu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbe thanadhu vadivaanaan
arule vaazhvin porulaanaan
panbin sigaram ivanaanaan
bakthi perukkaal sivanaanaan
netriyil moonraam kann kondaan
neela oliyai nadu kondaan
patri kondaar kaigalidai
paasa madhalai aaginraan
thavaththil sirandha maniyaanaan
dhaagam theera thaniyaanaan
thalaththil chennai nilamaanaan
nalaththai penum iraiyaanaan
ponnin uyarvaam manaththinile
poovin mirudhuvaay gunam kondaan
kannai imaigal kaappadhu pol
kadavul maamaa kaakkinraan
அன்பே தனது வடிவானான்
அருளே வாழ்வின் பொருளானான்
பண்பின் சிகரம் இவனானான்
பக்திப் பெருக்கால் சிவனானான்
நெற்றியில் மூன்றாம் கண் கொண்டான்
நீல ஒளியை நடு கொண்டான்
பற்றிக் கொண்டார் கைகளிடை
பாச மதலை ஆகின்றான்
தவத்தில் சிறந்த மணியானான்
தாகம் தீர தனியானான்
தலத்தில் சென்னை நிலமானான்
நலத்தைப் பேணும் இறையானான்
பொன்னின் உயர்வாம் மனத்தினிலே
பூவின் மிருதுவாய் குணம் கொண்டான்
கண்ணை இமைகள் காப்பது போல்
கடவுள் மாமா காக்கின்றான்
ความคิดเห็น