top of page

Anbai Vechchu Irangi

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

அன்பை வெச்சு இறங்கி வந்த சாமி - இவர்போல்

யாரிருக்கா எனக்கு கொஞ்சம் காமி

பண்பை புடம் போடுகிற சாமி - ஏழுமலை

பகவானே நேரே வந்த சாமி


பேச்சில் ஆளை இழுத்து போடும் சாமி - முருகப்

பெருமானே இவர்க்கும் குருசாமி

மூச்சுக்குள்ளே மந்திரம் உருட்டும் சாமி - நமக்கு

முக்திதர அழைக்கும் பெரியசாமி


சொந்த பந்தம் விட்டதிந்த சாமி

சோதனையை சாதனையாக்கும் சாமி

அந்தம் ஆதி இல்லா சிவ சாமி - இவர்

ஆளை எடை போடும் க்ருஷ்ணசாமி -[குருவாயூரில்]

படத்துக்குள்ளே கண்ணடிக்கும் சாமி - இது

பரீட்சை கூட எழுதி தரும் சாமி

குடத்துக்குள்ளே குத்துவிளக்கு சாமி - இது

கொதிச்செழுந்தா தீப்பிடிக்கும் பூமி


பச்சை கிளி போல அழகு சாமி - உலகை

பறந்து பறந்து சுற்றி வரும் சாமி

மச்ச அவதாரம் எங்கள் சாமி - இது

மனிதர்களை தெய்வமாக்கும் சாமி

கேட்ட வரம் கொடுக்கும் ஐயப்ப சாமி - எந்த

கேள்விக்கும் பதில் கொடுக்கும் கந்த சாமி

கூட்டை விட்டு பறந்து திரியும் சாமி - இது

கும்பிடுவோர்க்கு நாராயண சாமி


மலைமேலே வாழும் கோவிந்தசாமி - தன்

மகத்துவத்தை உணர்த்த வந்த சாமி - என்

மனசுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் சாமி - இது

மனசு வெச்சு சொர்க்கமாச்சு பூமி


 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page