Anavaradham Aasai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அனவரதம் ஆசை என்னும்
பெருங்கடலில் ஆழும் என்னை
மனது வைத்து காப்பதற்கு வருவாயே
ஒரு விரதம் நானிருந்து
உனது திரு நாமம் சொல்லி
திருவடியில் காதல் கொள்ள அருள்வாயே
பவ வினைகள் போக்கும் உந்தன்
சிவ வடிவைக் காண்பதற்கு
தவமியற்ற வழி வகைகள் செய்வாயே
உபநிடதம் காட்டுகின்ற
ஒரு நெறியை எனக்குணர்த்தி
உயரிய நிலை பெறவே செய்வாயே
கமல மலர் மேலமர்ந்த
அலைமகளின் திருமருகா
கடையனுக்கும் ஞானமதை தருவாயே
அதல பாதாளமென்னும்
அடியுறங்கும் என் மனதை
அதட்டி எழுப்பி ஆணை இடுவாயே
பகலவனின் ஒளியை மிஞ்சும்
பரிமளனே நின்னழகை
பருகி இன்பம் நானடைய தருவாயே
அகிலமெல்லாம் போற்றுகின்ற
ஆதி சிவ சங்கரனே
அடிமலரில் பதம் எனக்கும் அருள்வாயே
Comments