Amma nin
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Amma nin thala mannaagi - nin
azhagu mugam nidham kaanbeno
annai Shankari in arpudhangal
agilam viyandhida solveno
abishega neeraaga varuveno - un
angam nanaiththu kulirveno
thugilaagi un udal thazhuveno
dhurgai un anbil negizhveno
kallaay malaiyil valarveno
karpagam nin koyil aaveno
pullaay ulagil pirappeno - un
poompadham pattu silirppeno
manjal narkungumam aaveno
malar mugam amarndhu kolveno
anjanam theettiya malar vizhiyin
aanandha kanneer aaveno
kulindhirukkum thenral kaatraagi - kaar
kuzhalai alaindhu magizhveno - unai
ninaindhirukkum en nenjinile - nee
amarndhirukkum kaatchi kaanbeno
pullinamaagiye un pugazhai
thulli parandhu naan paadeno
poongkuyile undhan ponnadiyai
potri thudhithunai sereno
அம்மா நின் தல மண்ணாகி - நின்
அழகு முகம் நிதம் காண்பேனோ
அன்னை சங்கரி உன் அற்புதங்கள்
அகிலம் வியந்திடச் சொல்வேனோ
அபிஷேக நீராக வருவேனோ - உன்
அங்கம் நனைத்துக் குளிர்வேனோ
துகிலாகி உன் உடல் தழுவேனோ
துர்க்கை உன் அன்பில் நெகிழ்வேனோ
கல்லாய் மலையில் வளர்வேனோ
கற்பகம் நின் கோயில் ஆவேனோ
புல்லாய் உலகில் பிறப்பேனோ - உன்
பூம்பதம் பட்டுச் சிலிர்ப்பேனோ
மஞ்சள் நற்குங்குமம் ஆவேனோ
மலர் முகம் அம்ர்ந்து கொள்வேனோ
அஞசனம் தீட்டிய மலர் விழியின்
ஆனந்தக் கண்ணீர் ஆவேனோ
குளிர்ந்திருக்கும் தென்றல் காற்றாகி - கார்
குழலை அளைந்து மகிழ்வேனோ - உனை
நினைந்திருக்கும் என் நெஞ்சினிலே - நீ
அமர்ந்திருக்கும் காட்சி காண்பேனோ
புள்ளினமாகியே உன் புகழைத்
துள்ளிப் பறந்து நான் பாடேனோ
பூங்குயிலே உந்தன் பொன்னடியைப்
போற்றித் துதித்துனைச் சேரேனோ
Comments