top of page

Ambalaththil aaduginra

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Ambalaththil aaduginra kooththaadi - inru

aanandhaththile suzhalum kaatraadi

mandhiramam aindhezhuththai sonneendi - en

manaththulle vandhu kudi kondaandi


aadhi andham illaadha yekanadi - inru

jothi vadivaana anekanadi

anbenum pannbeduththu vandhaandi - adhai

arulaaga anaivarukkum thandhaandi


saambalai anru poosi thirindhaandi - inru

chandhana kungumaththai anindhaandi

puliththolai anruduththi irundhandi - inru

pudhu pattu vasthirangal uduththaandi


anru thiruvodu kaiyil vaiththaandi - inru

atchaya paathram kondu vandhaandi

thalaiyil oru pennai sumandhu alaindhaandi - inru

thaaraniyin sumaigalellaam yetraandi


malai thanile anru kudi kondaandi - inru

mannulagellaam valam vandhaandi

maalaiyaaga thalaigal korthu anindhaandi - inru

malarin kuviyalukkul ninraandi


thavam seydhaar edhiril mattum vandhaandi - inru

thagudhi ilaadhaarkkum varam thandhaandi - anru

sudukaattil nadu nisiyil ninraandi - inru

suttiduven un vinaiyai enraandi


அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தாடி - இன்று

ஆனந்தத்திலே சுழலும் காற்றாடி

மந்திரமாம் ஐந்தெழுத்தைச் சொன்னேண்டி - என்

மனத்துள்ளே வந்து குடி கொண்டாண்டி


ஆதி அந்தம் இல்லாத ஏகனடி - இன்று

ஜோதி வடிவான அநேகனடி

அன்பெனும் பண்பெடுத்து வந்தாண்டி - அதை

அருளாக அனைவருக்கும் தந்தாண்டி


சாம்பலை அன்று பூசித் திரிந்தாண்டி - இன்று

சந்தன குங்குமத்தை அணிந்தாண்டி

புலித்தோலை அன்றுடுத்தி இருந்தாண்டி - இன்று

புதுப்பட்டு வஸ்திரங்கள் உடுத்தாண்டி


அன்று திருவோடு கையில் வைத்தாண்டி - இன்று

அட்சய பாத்ரம் கொண்டு வந்தாண்டி

தலையில் ஒரு பெண்ணைச் சுமந்து அலைந்தாண்டி - இன்று

தாரணியின் சுமைகளெல்லாம் ஏற்றாண்டி


மலை தனிலே அன்று குடி கொண்டாண்டி - இன்று

மண்ணுலகெல்லாம் வலம் வந்தாண்டி

மாலையாகத் தலைகள் கோர்த்து அணிந்தாண்டி - இன்று

மலரின் குவியலுக்குள் நின்றாண்டி


தவம் செய்தார் எதிரில் மட்டும் வந்தாண்டி - இன்று

தகுதி இலாதார்க்கும் வரம் தந்தாண்டி - அன்று

சுடுகாட்டில் நடு நிசியில் நின்றாண்டி - இன்று

சுட்டிடுவேன் உன் வினையை என்றாண்டி

 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

コメント


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page