Alai magalum nee
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Alai magalum nee kalai magalum nee
malai magale Siva Shankariye
alaiyum manathai valai kondizhuthaay
nilaiyaay un padham ninaindhida vaithaay
ulaiyaay kodhikkum unarvai thanthaay
malaiyaam thuyargalum maandida vaithaay
silaiyaay ninren sirithaay ennul
kalaiyaa thavathil vaithaay amma
pon porul pugazhum bogamum thandhaay
potri unai paada sandhamaay vandhaay
abayam enraarkku nee aishwaryamaanaay
charanadaindhaarai samratchithaay
அலைமகளும் நீ கலைமகளும் நீ
மலைமகளே சிவ சங்கரியே
அலையும் மனத்தை வலை கொண்டிழுத்தாய்
நிலையாய் உன் பதம் நினைந்திட வைத்தாய்
உலையாய் கொதிக்கும் உணர்வைத் தணித்தாய்
மலையாம் துயர்களும் மாண்டிட வைத்தாய்
சிலையாய் நின்றேன் சிரித்தாய் என்னுள்
கலையாத் தவத்தில் வைத்தாய் அம்மா
பொன் பொருள் புகழும் போகமும் தந்தாய்
போற்றி உனைப்பாட சந்தமாய் வந்தாய்
அபயம் என்றார்க்கு நீ ஐஸ்வர்யமானாய்
சரணடைந்தாரை சம்ரட்சித்தாய்
Comments