Akkaraiyudan nal
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Akkaraiyudan nal baktharai kaakkkum Sri
Sivashankar babave
vandhittom vandhingu vaiththittom engal
kuraigalai theerppaaye
Sri Sivashankar babave abayam arulveere
vendhittom idhuvarai mandittom em vaazhvil
paava kanaiyaale
kandittom unnai kandandhittom paavangal
un kann paarvaiyaale
punnpattu vendhidum nenjinil un karunai
then sottu pattaale
chattenru pogum ikkattu nilaiyum thaaye un arulaale
ullaththai onraakki un padham vaiththittom
oozhvinai azhippaaye [en]
kallaththai pokki nal kalviyai tharuvaay
malligai manaththaale
pallaththil veezhndhu paazhyaay pona en vaazhvai
pann pada seidhaaye
pannodum porulodum bakthiyil naan oori
paadida arulvaaye
eppodhum vandhunnai dharisiththu kadaiththera
karunai purivaaye
ippodhu pol ini eppodhum ellorkkum dharisanam arulvaaye
அக்கரையுடன் நல் பக்தரை காக்கும் ஸ்ரீ
சிவசங்கர் பாபாவே
வந்திட்டோம் வந்திங்கு வைத்திட்டோம் எஙகள்
குறைகளை தீர்ப்பாயே
ஸ்ரீ சிவச்ங்கர் பாபாவே அபயம் அருள்வீரே
வெந்திட்டோம் இதுவரை மண்டிட்டோம் எம் வாழ்வில்
பாவ கணையாலே
கண்டிட்டோம் உன்னை கடந்திட்டோம் பாவங்கள்
உன் கண் பார்வையாலே
புண்பட்டு வெந்திடும் நெஞ்சினில் உன் கருணை
தேன் சொட்டு பட்டாலே
சட்டென்று போகும் இக்கட்டு நிலையும்
தாயே உன் அருளாலே
உள்ளத்தை ஒன்றாக்கி உன் பதம் வைத்திட்டோம்
ஊழ்வினை அழிப்பாயே [என்]
கள்ளத்தை போக்கி நல் கல்வியை தருவாய்
மல்லிகை மனத்தாலே
பள்ளத்தில் வீழ்ந்து பாழாய்ப்போன என் வாழ்வை
பண்பட செய்தாயே
பண்ணோடும் பொருளோடும் பக்தியில் நான் ஊறி
பாடிட அருள்வாயே
எப்போதும் வந்துன்னை தரிசித்து கடைத்தேற்ற
கருணை புரிவாயே
இப்போது போல் இனி எப்போதும் எல்லோர்க்கும்
தரிசனம் அருள்வாயே
Comments