Akilaanda Kodi
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயகா
ஆனந்த கணேஷ்புரி அம்ர்ந்த விநாயகா
புவிதன்னில் உயர்ந்த புண்ணிய கேளையிலே
குவிகின்ற மாந்தருக்கு நிகரிலா வாழ்வருளும்
விஸ்வரூபம் கொண்டு விளங்கும் மஹேஷ்வரா
வேண்டும் வரம் கேள் எனத் தூண்டும் ஜகதீசனே
ஏகாந்தமாய் கோயில் கொண்ட கணேசனே
ஏழைப் பங்காளனே எங்கள் சிவசங்கரனே
கருத்தை கவர்ந்திழுக்கும் கருணைக் காவியமே
கண்ணீர் துடைத்திருக்கும் காந்த ஓவியமே
பிள்ளையார் பட்டியினின்றும் பெருகி வந்த தீர்த்தமே
பேரருள் தர இங்கு இரங்கி வந்த மூர்த்தமே.
Comments