Ainkaranam Avan Pugazhai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
ஐங்கரனாம் அவன் புகழைப் பாடுவேன் - அவன்
அருள் பலத்தால் அவன் பதத்தை நாடுவேன்
துன்பம் தீரும் ஒரு வழியைத் தேடுவேன் - அந்த
தும்பிக்கையை நம்பிக்கை கொண்டாடுவேன்
வானம் பூமியை அவனுள் காணுவேன்
வையம் போற்றும் வள்ளன்மையைக் கூறுவேன் - அவன்
வரத்தினிலே பரத்தினில் நான் தேறுவேன் - எல்லாம்
வல்லப கணபதி என பாடுவேன்
வாய்மை தவறவோ மனம் நாணுவேன் - அவன்
வழியினின்றும் நூலிழையோ கோணுவேன்
வாக்கினை என் அணிகலனாய் பூணுவேன் - அந்த
வாஞ்சையை என் பொக்கிஷமாய் பேணுவேன்
திக்கெட்டும் அவன் உரு கொண்டாடுவேன் - அந்த
தீனபந்துவை தினம் கொண்டாடுவேன்
தேன் சொரியும் பூ மாலைகள் சூட்டுவேன் - அந்த
தேவ தேவனை உனக்கும் காட்டுவேன்
Comments