Aindhu Malaikku
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
ஐந்து மலைக்கதிபதியாய் அமர்ந்திருக்கும் தெய்வம்
ஐயன் சபரீசன் என்னை அடிமை கொண்ட தெய்வம்
குருவுக்கும் குருவாகி நின்ற பெரும் தெய்வம்
குலதெய்வமாகி எமைக் காக்க வந்த தெய்வம்
ஹரிஹரன் அன்பு கொண்டு படைத்ததிந்த தெய்வம்
அருளாலே பந்தளனை ஆட்கொண்ட தெய்வம்
பிள்ளைக்கலி தீர்க்க வந்த பெருமகனாம் தெய்வம்
கிள்ளை மொழி பேசி கலி தீர்க்க வந்த தெய்வம்
காட்டினிலே கண்டெடுத்த கண்மணி இத்தெய்வம்
கருவிழியில் கருணைதனை தேக்கி வைத்த தெய்வம்
நீட்டிய கை பிடித்து கரை ஏற்றிவிடும் தெய்வம்
நிழல்போல நமைத் தொடர்ந்து காத்து வரும் தெய்வம்
புலிப் பாலைக் கொண்டு வர புறப்பட்ட தெய்வம்
புலி போல மஹிஷியை பாய்ந்தழித்த தெய்வம்
பூதலத்தின் மாயைகளை மறுதளித்த தெய்வம்
புன்னகையில் ஏழுலகை வசமாக்கும் தெய்வம்
இருமுடி சுமந்து மலை ஏறி வரும் தெய்வம்
தனி வழியே கானகத்தில் நடந்து வந்த தெய்வம்
தவக்கோலம் கொண்டு தனி அமர்ந்துவிட்ட தெய்வம்
தணியாத மனத் தாகம் தணித்து விடும் தெய்வம்
Comments