Agilamellaam anbu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Agilamellaam anbu mayam
Aanmaavil aanandha mayam
Idhayangalile uvagaimayam
Iyarkaiyellaam Sivashankar mayam
Uyirgal thedum anna mayam
Oottum amudham praana mayam
Engum edhilum shakthi mayam
Yezhu logamum bakthi mayam
Olikkum Shankara naama mayam
Oankaaraththin naadha mayam
Sirikkum sadhangayil geetha mayam
Silirkkum vedha gosha mayam
Ullangalile sathya mayam
Udhirum ninaivugal vanna mayam
Kallam aganra semmai mayam
Karuththellaam pudhu kanavu mayam
Kannil minnum karunai mayam
Karangalil alayaum kaantha mayam
Kadavul mama jothi mayam - avan
Kaalgal tharume namakkabayam
***************
அகிலமெல்லாம் அன்பு மயம்
ஆன்மாவில் ஆனந்த மயம்
இதயங்க்ளிலே உவகை மயம்
இயற்கையெல்லாம் சிவசங்கர் மயம்
உயிர்கள் தேடும் அன்ன மயம்
ஊட்டும் அமுதம் ப்ராண மயம்
எங்கும் எதிலும் சக்தி மயம்
ஏழுலோகமும் பக்தி மயம்
ஒலிக்கும் சங்கர நாம மயம்
ஓங்காரத்தின் நாத மயம்
சிரிக்கும் சதங்கையில் கீத மயம்
சிலிர்க்கும் வேத கோஷ மயம்
உள்ளங்களிலே சத்ய மயம்
உதிரும் நினைவுகள் வண்ண மயம்
கள்ளம் அகன்ற செம்மை மயம்
கருத்தெல்லாம் புது கனவு மயம்
கண்ணில் மின்னும் கருணை மயம்
கரங்களில் அலையும் காந்த மயம்
கடவுள் மாமா ஜோதி மயம் - அவன்
கால்கள் தருமே நமக்கபயம்
Comments