Agada vigadam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Agada vigadam pesi pesi thazhumberi
udaiyum mannkudam udaiyudhenru unaraamal
uyarndha porulaam unnai adaiya theriyene
thakita thimitha ena aadum sivanaarin
thagappan saami needhaan enru ariyaamal
sagadam pole urulum vaazhve sadhamenru
jagaththai aalum Shankaraththai thudhiyene
kasadu niraindha ullam undhan kai pattu
kanaththil thannai arindha maayam yedhedhu
asadu agandhai aanavangal enum maayai
anaiththum oadi maraindha vidhamum yedhedhu
adhira muzhangi varum velin oli kettu
aanandhaththil naan kalandhadhedhu
udhiruginra kanneer vazhiyum dhisai maari
un padhaththai nanaikkum maayam yedhedhu
அகட விகடம் பேசி பேசி தழும்பேறி
அனைத்தும் எனது எனது என்று உறவாடி
உடையும் மண்குடம் உடையுதென்று உணராமல்
உயர்ந்த பொருளாம் உன்னை அடைய தெரியேனே
தகிட திமித என ஆடும் சிவனாரின்
தகப்பன் சாமி நீதானென்று அறியாமல்
சகடம் போலே உருளும் வாழ்வே சதமென்று
ஜகத்தை ஆளும் சங்கரத்தை துதியேனே
கசடு நிறைந்த உள்ளம் உந்தன் கை பட்டு
கணத்தில் தன்னை அறிந்த மாயம் ஏதேது
அசடு அகந்தை ஆணவங்கள் எனும் மாயை
அனைத்தும் ஓடி மறைந்த விதமும் ஏதேது
அதிர முழங்கி வரும் வேலின் ஒலி கேட்டு
ஆனந்தத்தில் நான் கலந்ததேது
உதிருகின்ற கண்ணீர் வழியும் திசை மாறி
உன் பதத்தை நனைக்கும் மாயம் ஏதேது
コメント