Adaiya nedunkadhavu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Adaiya nedunkadhavu amaindha koyil
amarargal valam varum ariya koyil
kalaiya thavaththil namai aazhththum koyil - yezhu
malaiyaan gambeeramaay nirkum koyil
tholaiyaadha nidhiyamaay vandha koyil
thodaraaga oozhvinai kazhatrum koyil
kulaiyaadha nambikkai oottum koyil
gopurame kreedamaay amaindha koyil
saththiya nilaththinil vilaindha koyil
samadharma thenral ulaavum koyil
niththiya anandha aagaaya koyil
negizhum manam urugum neeraruvi koyil
aggini saatchiyaay nirkum koyil
amaidhiyai engum nilai naattum koyil
chikkena valai veesi valaikkum koyil - Siva
Shankara poorana bramman koyil
padhinettu padigalil padhinenn sidhdhar
padham arulave kaaththu nirkum koyil
thudhi seyyum panniru aazhvaargalum
dhuriya nilai petru padiyaana koyil
anjel enrabayam thandha annai aval
Sri chakra vadivile amarndha koyil
anjanaa puthran Sri aanjaneyan
panja mugamaay vaayil kaakkum koyil
sheeradi naadhanodu koti mahaan
Sri raagavendhrarodu kaanji mahaan
vaaninru vaazhththukkal pozhiyum koyil
varalaaru kaanaadha vadiva koyil
bagavaanin dvaadhasa naamangalum
panniru raasiyum padigalaana koyil
bakthiyudan kai kooppum nava kolgalum
baratham perumaiyura nirkum koyil
அடையா நெடுங்கதவு அமைந்த கோயில்
அமரர்கள் வலம் வரும் அரிய கோயில்
கலையா தவத்தில் நமை ஆழ்த்தும் கோயில் - ஏழு
மலையான் கம்பீரமாய் நிற்கும் கோயில்
தொலையாத நிதியமாய் வந்த கோயில்
தொடராக ஊழ்வினை கழற்றும் கோயில்
குலையாத நம்பிக்கை ஊட்டும் கோயில்
கோபுரமே க்ரீடமாய் அமைந்த கோயில்
சத்திய நிலத்தினில் விளைந்த கோயில்
சம தர்ம தென்றல் உலாவும் கோயில்
நித்திய ஆனந்த ஆகாய கோயில்
நெகிழும் மனம் உருகும் நீரருவி கோயில்
அக்கினி சாட்சியாய் நிற்கும் கோயில்
அமைதியை எங்கும் நிலை நாட்டும் கோயில்
சிக்கென வலை வீசி வளைக்கும் கோயில் - சிவ
சங்கர பூரண ப்ரம்மன் கோயில்
பதினெட்டு படிகளில் பதினெண் சித்தர்
பதம் அருளவே காத்து நிற்கும் கோயில்
துதி செய்யும் பன்னிரு ஆழ்வார்களும்
துரிய நிலை பெற்று படியான கோயில்
அஞ்சேலென்றபயம் தந்த அன்னை அவள்
ஸ்ரீ சக்ர வடிவிலே அம்ர்ந்த கோயில்
அஞ்சனா புத்ரன் ஸ்ரீ ஆஞ்சனேயன்
பஞ்ச முகனாய் வாயில் காக்கும் கோயில்
ஷீரடி நாதனொடு கோடி மகான்
ஸ்ரீ ராகவேந்த்ரரொடு காஞ்சி மகான்
வானின்று வாழ்த்துக்கள் பொழியும் கோயில்
வரலாறு காணாத வடிவ கோயில்
பகவானின் த்வாதச நாமங்களும்
பன்னிரு ராசியும் படிகளான கோயில்
பக்தியுடன் கை கூப்பும் நவகோள்களும்
பாரதம் பெருமயுற நிற்கும் கோயில்
Comments