Aayiram kann
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aayiram kann unakkirukkum perumidhamo - ennai
arai kannaal paarppadharkum thaamadhamo
paayirangal paadiyum paaraamugamo - amma
baktharai kaaththida un karam varumo
vaayirundhum oomaiyaay naan vaazhuvadho - en thaay
nee irundhum oru nilaiyil thaazhuvadho
maayai enum irul enaiye soozhuvaadho
makkal padum thuyaram enre theeruvadho
kaththi kadhari unnai koovugirom - un
karunaiyaithaan dhinam dhiname thedugirom
chiththam thadumaaru munne vandhidamma - amma
seekkirame unnarulai thandhidamma
ஆயிரம் கண் உனக்கிருக்கும் பெருமிதமோ - என்னை
அரைக்கண்ணால் பார்ப்பதற்கும் தாமதமோ
பாயிரங்கள் பாடியும் பாராமுகமோ - அம்மா
பக்தரை காத்திட உன் கரம் வருமோ
வாயிருந்தும் ஊமையாய் நான் வாழுவதோ - என் தாய்
நீயிருந்தும் ஒரு நிலையில் தாழுவதோ
மாயை எனும் இருள் எனையே சூழுவதோ
மக்கள் படும் துயரம் என்றே தீருவதோ
கத்தி கதறி உன்னைக் கூவுகிறோம் - உன்
கருணையைத்தான் தினம் தினமே தேடுகிறோம்
சித்தம் தடுமாறு முன்னே வந்திடம்மா - அம்மா
சீக்கிரமே உன்னருளை தந்திடம்மா
留言