Aayi Magamaayi Nee
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
ஆயி மகமாயி நீ அகிலாண்ட நாயகி நீ
ஜோதி ஸ்வரூபிணி ஸ்வர்ண காமாட்சி நீ
காளி திரிசூலி நீ கருணா ப்ரவாஹினி
கோகில வாணி நீ குருகுஹ ஜனனி நீ
சண்டா முண்டாசுர மர்த்தினி சாம்பவி நீ
சந்தோஷ சாம்ராஜ்ய சர்வ பரிபாலினி நீ
அண்ட சராசரங்கள் ஆட்டுவிக்கும் சக்தி நீ
அம்பா சிவசங்கரி நீ ஆனந்த பைரவி நீ
Comments