Aasai ennum kadalinile
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aasai ennum kadalinile alai padagaanen - nee
anbu ennum valai veesa un vayamaanen
oasaiyinri pirar manadhai maatrum marundhe - nee
un ninaivai thandha pinne manam maarinen
kaasu panam peridhena yaan karpanai seidhen
kaalamelaam sindhanaiyai virpanai seidhen
maasu maru illaadha manam padaithavaa - adhai
thoosu ena nee uraikka yaan thirundhinen
saadhanaigal seidhadhaaga naanum ninaindhen - adhuve
vedhanaiyaay maari vida kangal nanaindhen
bodhanaigal seidhu enai dhisai thiruppinaay - guru
nadhan undhan kaal thadathai patri nadandhen
maayai enai mayakkivida yedho pesinen
mannavaa un mun uraikka manam koosinen
thaaye unai dharisanam seyyum thavappayan petren - nee
thandha aasi balaththaale puththuyir petren
Shankara Siva Shankara ena paadi uruguven - un
sannidhi enai pudamidave vendi maruguven
mangalagara moorthi unai ninaindhu paaduven - un
mandhahaasa punnagaiyil ennai theduven
ஆசை எனும் கடலினிலே அலை படகானேன் - நீ
அன்பு எனும் வலை வீச உன் வயமானேன்
ஓசையின்றி பிறர் மனதை மாற்றும் மருந்தே - நீ
உன் நினைவைத் தந்த பின்னே மனம் மாறினேன்
காசு பணம் பெரிதென யான் கற்பனை செய்தேன்
காலமெல்லாம் சிந்தனையை விற்பனை செய்தேன்
மாசு மறு இல்லாத மனம் படைத்தவா - அதை
தூசு என நீ உரைக்க யான் திருந்தினேன்
சாதனைகள் செய்ததாக நானும் நினைந்தேன் - அதுவே
வேதனையாய் மாறி விட கண்கள் நனைந்தேன்
போதனைகள் செய்து எனை திசை திருப்பினாய் - குரு
நாதன் உந்தன் கால் தடத்தை பற்றி நடந்தேன்
மாயை எனை மயக்கிவிட ஏதோ பேசினேன் - அதை
மன்னவா உன் முன் உரைக்க மனம் கூசினேன்
தாயே உனை தரிசனம் செய்யும் தவப்பயன் பெற்றேன் - நீ
தந்த ஆசி பலத்தாலே புத்துயிர் பெற்றேன்
சங்கர சிவசங்கர என பாடி உருகுவேன் - உன்
சந்நிதி எனை புடமிடவே வேண்டி மறுகுவேன்
மங்களகரமூர்த்தி உனை நினைந்து பாடுவேன் - உன்
மந்தஹாச புன்னகையில் என்னை தேடுவேன்
Comments