top of page

Aasai ennum kaattu

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 2 min read

Aasai ennum kaattu theeyil agappattu karuguginren

aravindhaa un peyar koovi agailamellaam theduginren

oasaiyodu thoonil ezhundha oankaara Sri Narasimma

oadi vandhu kai koduththu udhaviduvaay Shankarasimma


maayai enum paambu ennai mariththu thurathudhaiyaa

maasugal soozhndha manam mayakkaththil aazhudhaiyaa

kaalingan meedhu ninru nadam seydha Sri Narasimma

karunaiyodu vandhu ennai kaaththiduvaay Shankarasimma


ulaagennum irunda kaattil unmaththam pidiththalaindhen

kalagam seyyum en manaththil kabadanggal serndhadhaiyaa

aayarkulam kaaththa engal achudhane Sri Narasimma

abayam abayam ennai kaaththiduvaay Shankarasimma


valaipolum samsaaraththil vagaiyaaga sikki konden

pulangalellaam thoondilil sikki punnaana nenjamidhu

alaimagalai idhayam vaiththa aanandha Sri Narasimma

nilaiyaana vaazhvalippaay nedumaale Shankarasimma


aazhamaam paazhkinatril azhundhinen samsaaraththil

vaazha oar needhiyinri vadhaipattu thavikkinrene

thaazhmaiyodu unnai vanangi thanjamenren kelaay kanna

thaamadham seyyaamale kaaththiduvaay Shankarasimma


samsaaram ennum sarppam chaththuruvaay aanadhuve

sadhaakaalam ennai theendi vaazhkkai vishamaanadhuve

amirdham nirai kadalinile aanandha sayanam kondaay

achchudhane garudan yeri vandhiduvaay Shankarasimma


paapamenum vidhaigalaale paarile mulaiththa maram

kaamam krodham ennum kilaigalai konda maram

saabamo yeri vitten adhu samsaara maramaachchaiyaa

thaamodharane kaappaay kaarunyaa Shankarasimmaa


samsaara kadalinile sanjala mudhalaigalaam

saadida avadhiyutru saaginra nilaipattene

aadhi moolame enru alariya gajendhiranai

kaaththavane ennai kaappaay kanna hey Shankarasimma


pugai vandi payanam polum purappattu vandha vaazhkkai

pagai vambu pesi yedhum payaninri vaazhginrene

vagai vagaiyaana poli mayakkaththil uzhalum ennai

nagaimugam kondoy kaappaay narayana Shankarasimma


madham konda yaanai polum samsaara vaazhkkaiyaachchu

nidham nidham thuvaithu ennai nirmoolam aakkudhaiyaa

idham thara vandhiduvaay endhan uyir pogum neram

padham tharum perarule bagavaane Shankarasimma




ஆசையெனும் காட்டு தீயில் அகப்பட்டுக் கருகுகின்றேன்

அரவிந்தா உன் பெயர் கூவி அகிலமெல்லாம் தேடுகின்றேன்

ஓசையொடு தூணில் எழுந்த ஓங்கார ஸ்ரீ நரசிம்மா

ஓடிவந்து கை கொடுத்து உதவிடுவாய் சங்கரசிம்மா


மாயையெனும் பாம்பு என்னை மறித்துத் துரத்துதையா

மாசுகள் சூழ்ந்த மனம் மயக்கத்தில் ஆழுதையா

காளிங்கன் மீது நின்று நடம் செய்த ஸ்ரீ நரசிம்மா

கருணையொடு வந்து என்னைக் காத்திடுவாய் சங்கரசிம்மா


உலகென்னும் இருண்ட காட்டில் உன்மத்தம் பிடித்தலைந்தேன்

கலகம் செய்யும் என் மனத்தில் கபடங்கள் சேர்ந்ததையா

ஆயர்குலம் காத்த எங்கள் அச்சுதனே ஸ்ரீ நரசிம்மா

அபயம் அபயம் என்னைக் காத்திடுவாய் சங்கரசிம்மா


வலை போலும் சம்சாரத்தில் வகையாக சிக்கிக் கொண்டேன்

புலன்களெல்லாம் தூண்டிலில் சிக்கிப் புண்ணான நெஞ்சமிது

அலைமகளை இதயம் வைத்த ஆனந்த ஸ்ரீ நரசிம்மா

நிலையான வாழ்வளிப்பாய் நெடுமாலே சங்கரசிம்மா


ஆழமாம் பாழ்கிணற்றில் அழுந்தினேன் சம்சாரத்தில்

வாழவோர் நீதியின்றி வதைபட்டுத் தவிக்கின்றேனே

தாழ்மையொடு உன்னை வணங்கித் தஞ்சமென்றேன் கேளாய் கண்ணா

தாமதம் செய்யாமலே காத்திடுவாய் சங்கரசிம்மா


சம்சாரமென்னும் சர்ப்பம் சத்துருவாய் ஆனதுவே

சதாகாலம் என்னைத் தீண்டி வாழ்க்கை விஷமானதுவே

அமிர்தம் நிறை கடலினிலே ஆனந்த சயனம் கொண்டாய்

அச்சுதனே கருடன் ஏறி வந்திடுவாய் சங்கரசிம்மா


பாபமெனும் விதைகளாலே பாரிலே முளைத்த மரம்

காமம் குரோதமென்னும் கிளைகளைக் கொண்ட் மரம்

சாபமோ ஏறிவிட்டேன் அது சம்சார மரமாச்சையா

தாமோதரனே காப்பாய் காருண்யா சங்கரசிம்மா


சம்சாரக் கடலினிலே சஞ்சல முதலைகளாம்

சாடிட அவதியுற்று சாகின்ற நிலைப்பட்டேனே

ஆதிமூலமே என்று அலறிய கஜேந்திரனை

காத்தவனே என்னைக் காப்பாய் கண்ணா ஹே சங்கரசிம்மா


புகை வண்டிப் பயணம் போலும் புறப்பட்டு வந்த வாழ்க்கை

பகை வம்பு பேசி ஏதும் பயனின்றி வாழ்கின்றேனே

வகை வகையான போலி மயக்கத்தில் உழலும் என்னை

நகைமுகம் கொண்டோய் காப்பாய் நாராயணா சங்கரசிம்மா


மதம் கொண்ட யானை போலும் சம்சார வாழ்க்கையாச்சு

நிதம் நிதம் துவைத்து என்னை நிர்மூலமாக்குதையா

இதம் தர வந்திடுவாய் எந்தனுயிர் போகும் நேரம்

பதம் தரும் பேரருளே பகவானே சங்கரசிம்மா



 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page