Aarumugam irukka
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aarumugam irukka anjuvadhum yenadi
anname nee pirarai kenjuvadhum yenadi
korum varangalellaam koduththidum deivam - sendhil
kumarane Sivashankaran enrurudhi kolladi
pazham thanakkillai enru pazhaniyil thani amarndhaan
padaikkinra brammanaiye pidiththu siraiyilittaan
uzhalum manam kalikka ulagil pirandhu vandhaan - ivan
kazhalin nizhal irukka kavalai unakkenadi
ஆறுமுகம் இருக்க அஞ்சுவதும் ஏனடி
அன்னமே நீ பிறரைக் கெஞ்சுவதும் ஏனடி
கோரும் வரங்களெல்லாம் கொடுத்திடும் தெய்வம் - செந்தில்
குமரனே சிவசங்கரன் என்றுறுதி கொள்ளடி
பழம் தனக்கில்லை என்று பழனியில் தனி அமர்ந்தான்
படைக்கின்ற ப்ரம்மனையே பிடித்துச் சிறையிலிட்டான்
உழலும் மனம் களிக்க உலகில் பிறந்து வந்தான் - இவன்
கழலின் நிழலிருக்கக் கவலை உனக்கேனடி
Comments