Aanmeegam enbadhu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aanmeegam enbadhu periya vishayamena
anji odhungaadhe - un
aathma naadhanai anaiththilum kaanbadhe
aanmeegam enbadhai maravaadhe - uyarndha
aanmeegam idhudhaaan maravaadhe
innoru manidhanin kangalil thonrum
punnagai dheebaththai anaikkaadhe - pirar
vayitrukkulle un aduppai amaiththu
arusuvai unavai samaikkaadhe - idhudhaan
aanmeegam enbadhai marakkkaadhe
nee uyarndhavanaa illaai thaazhndhavanaa - idhai
unnidame nee kelu - nee
uyarndhavanaayin unnilum uyarndha
oruvanai inge paaru [andha]
nee thaazhndhirundhaalum kavalai padaadhe
samratchanaavil seru - un
thaazhvugal neengum uyarvugal oangum
Shankaran thirumugam paaru - Siva
Shankaran thirumugam paaru
aanma anubavam adaiyaamal verum
porul mel aasai valarkkaadhe - nee
vaazhndhidum podhe irandhavanaagi
maanuda padharaay madiyaadhe - idhudhaan
aanmeegam enbadhai maravaadhee
thaazhndhu kidakkum maanudane - un
sombal edhiriyai thuraththi vidu - un
thaazhvum uyarvum unnidam irukkudhu
pirar mel pazhiyai niruththi vidu
naam jeevaathmaavin swaroopam - ivan
paramaathama enum pokkisham
Shankaram Siva Shankaram
sarva mangalam vazhangum mandhiram
ஆன்மீகம் என்பது பெரிய விஷயமென
அஞ்சி ஒதுங்காதே - உன்
ஆத்மநாதனை அனைத்திலும் காண்பதே
ஆன்மீகம் என்பதை மறவாதே - உயர்ந்த
ஆன்மீகம் இதுதான் மறவாதே
இன்னொரு மனிதனின் கண்களில் தோன்றும்
புன்னகை தீபத்தை அணைக்காதே - பிறர்
வயிற்றுக்குள்ளே உன் அடுப்பை அமைத்து
அறுசுவை உணவை சமைக்காதே - இதுதான்
ஆன்மீகம் என்பதை மறக்காதே
நீ உயர்ந்தவனா இல்லை தாழ்ந்தவனா - இதை
உன்னிடமே நீ கேளு - நீ
உயர்ந்தவனாயின் உன்னிலும் உயர்ந்த
ஒருவனை இங்கே பாரு [அந்த]
நீ தாழ்ந்திருந்தாலும் கவலைப்படாதே
சம்ரட்சணாவில் சேரு - உன்
தாழ்வுகள் நீங்கும் உயர்வுகள் ஓங்கும்
சங்கரன் திருமுகம் பாரு [சிவ]
ஆன்ம அனுபவம் அடையாமல் - வெறும்
பொருள் மேல் ஆசை வளர்க்காதே - நீ
வாழ்ந்திடும் போதே இறந்தவனாகி
மானுடப் பதராய் மடியாதே - இதுதான்
ஆன்மீகம் என்பதை மறவாதே
தாழ்ந்து கிடக்கும் மானுடனே - உன்
சோம்பல் எதிரியை துரத்தி விடு - உன்
தாழ்வும் உயர்வும் உன்னிடம் இருக்குது
பிறர் மேல் பழியை நிறுத்தி விடு
நாம் ஜீவாத்மாவின் சொரூபம் - இவன்
பரமாத்மா எனும் பொக்கிஷம்
சங்கரம் சிவ சங்கரம் - சர்வ
மங்கலம் வழங்கும் மந்திரம்
திருப்பாற்கடலும் திகட்டி போனதால்
[தருமமிகு] சென்னை நகரில் உதித்தவன் - நீ
திகைப்படையாதே இவன்தான் எல்லா
[திவ்ய] க்ஷேத்திரங்களிலும் வசிப்பவன்
சென்னை நகரும் பிடிக்காவிட்டால்
[தனியே] திருப்பாற்கடலுக்கு போய்விடுவான்
தன்னை எவர்க்கும் புரியாவிட்டால்
[ஜோதி] ராமலிங்கம் போல் ஆகிடுவான்
இவன் திருப்பாற்கடலுக்கு திரும்பிவிடாமல்
இங்கே இவனை கட்டுவோம் - அந்த
சகாதேவன் போல் கட்டுவோம்
பூரண சரணாகதியால் கட்டுவோம் - இந்த
கேளை நகரில் கட்டுவோம் - நம்
நெஞ்சக் குகையில் கட்டுவோம்.
நாம் கட்டுவோம்.. இவனைக் கட்டுவோம்
Comentários