Aanmeega raanuvathai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aanmeega raanuvathai vaazhthi paaduvom - adhai
aatchi seyyum shankararkku potri solluvom
thaarmeega kolgaigal pinpatri vaazhuvom
thaaraniyor menmai pera serndhu uzhaippom
anbu ennum panbudhaane aayudham inge
aanandham thaane avar seerudai inge
dhyaanam yogam vedham ennum payirchigal inge
thannai arindhinbamurum kaatchigal inge
kannanavan thiruvadidhaan kodiyin chinnamaam - avan
karunai karam mele ninru aasi vazhangumaam
idhayamennum thamaraiyil idam pidikkumaam
idargal neekki motchathirku vazhiyum kaatumaam
saththiyathirkaaga vaazhum saatchigal inge
samadharma nadai muraiyin kaatchigal inge
buththiyai nal dhisai thiruppum muyarchiyum inge
punar janmam thandhu vidum puratchiyum inge
nermai ennum oar mai nammai vasiyam seyuyumaam
nenjil adhan kaarvai enrum gaanam seyyumaam
aanandhaththin kaalgal inge nadanam aadumaam
arpudathai ezhudha thedum ellaa yedumaam
ஆன்மீக ராணுவத்தை வாழ்த்திப் பாடுவோம் - அதை
ஆட்சி செய்யும் சங்கரர்க்கு போற்றி சொல்லுவோம்
தார்மீக கொள்கைகள் பின்பற்றி வாழுவோம்
தாரணியோர் மேன்மை பெற சேர்ந்து உழைப்போம்
அன்பு என்னும் பண்புதானே ஆயுதம் இங்கே
ஆனந்தம் தானே அவர் சீருடை இங்கே
தியானம் யோகம் வேதம் என்னும் பயிற்சிகள் இங்கே
தன்னை அறிந்தின்பமுறும் காட்சிகள் இங்கே
கண்ணனவன் திருவடிதான் கொடியின் சின்னமாம் - அவன்
கருணைக்கரம் மேலே நின்று ஆசி வழங்குமாம்
இதயமென்னும் தாமரையில் இடம் பிடிக்குமாம்
இடர்கள் நீக்கி மோட்சத்திற்கு வழியும் காட்டுமாம்
சத்தியத்திற்காக வாழும் சாட்சிகள் இங்கே
சமதர்ம நடை முறையின் காட்சிகள் இங்கே
புத்தியை நல் திசை திருப்பும் முயற்சியும் இங்கே
புனர்ஜன்மம் தந்து விடும் புரட்சியும் இங்கே
நேர்மை என்னும் ஓர் மை நம்மை வசியம் செய்யுமாம்
நெஞ்சில் அதன் கார்வை என்றும் கானம் செய்யுமாம்
ஆனந்தத்தின் கால்கள் இங்கே நடனம் ஆடுமாம்
அற்புதத்தை எழுதத்தேடும் எல்லா ஏடுமாம்
Comments