top of page

Aanmaavin dhaagam

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Aanmaavin dhaagam theerkkum aandavanum needhaane

aanandha kaatraay ennul aalaigiravan needhaane

perinba vazhiyai kaatuum perumaanum needhaane - en

pettagathil serthu vaitha perunidhiyum needhaane


ullaththin ulle nirkum oru dheivam needhaane

oru podhum enai vittagala uruthunaiyum needhaane

kallathil per pugazh petra kannapiraan needhaane

kaadhalaagi kasindhu kanneer malki unai thozhuvene


pillaikkali theerththa endhan piriyamagan needhaane

piththaagi unnai paada vaithavanum needhaane

vatraadha anbaay perugum jeevanadhi needhaane

valamaana vazhvukkoru vazhikaatti needhaane


kadhirukkum oliyai thandha kadavulavan needhaane

gana mazhaiyaay arulai pozhiyum karunai mahaan needhaane

udhavikku azhaiththaal oadi varubavanum needhaane - en

uravukkkul uyarndha endhan annaiyaval needhaane




ஆன்மாவின் தாகம் தீர்க்கும் ஆண்டவனும் நீதானே

ஆனந்தக் காற்றாய் என்னுள் அலைகிறவன் நீதானே

பேரின்ப வழியைக் காட்டும் பெருமானும் நீதானே - என்

பெட்டகத்தில் சேர்த்து வைத்த பெருநிதியும் நீதானே


உள்ளத்தின் உள்ளே நிற்கும் ஒரு தெய்வம் நீதானே

ஒரு போதும் எனை விட்டகலா உறுதுணையும் நீதானே

கள்ளத்தில் பேர் புகழ் பெற்ற கண்ணபிரான் நீதானே

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி உனைத் தொழுவேனே


பிள்ளைக்கலி தீர்த்த எந்தன் பிரிய மகன் நீதானே

பித்தாகி உன்னைப் பாட வைத்தவனும் நீதானே

வற்றாத அன்பாய்ப் பெருகும் ஜீவநதி நீதானே

வளமான வாழ்வுக்கொரு வழிகாட்டி நீதானே


கதிருக்கும் ஒளியைத் தந்த கடவுளவன் நீதானே

கனம ழையாய் அருளைப் பொழியும் கருணை மகான் நீதானே

உதவிக்கு அழைத்தால் ஓடி வருபவனும் நீதானே - என்

உறவுக்குள் உயர்ந்த எந்தன் அன்னையவள் நீதானே



 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page