top of page

Aanma Ezhudhiyadhu

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

ஆன்மா எழுதியதிப் பாட்டு - நீ

அங்கீகரிப்பாயோ கேட்டு

வான்மாரி உன்னருள் வியந்து - வாரி

வழங்கும் பேரன்பைப் புகழ்ந்து


சூத்திரம் என்ன செய்தாயோ - உனைச்

சுற்றிச் சுற்றி வருகின்றேன் -ஒரு

மாத்திரைப்போதும் பிரியேன் எனும்

மன நிலை கொண்டலைகின்றேன்


[ஒரு] பாத்திரம் நான் ஆவேனோ

பதம் பற்றி உனில் கலப்பேனோ

சாத்திரம்நெறிமுறை அறியேன் - என்

சங்கரா உனைத்தானே அறிவேன்


கனவிலும் உன்முகம் தானே -என்

கருத்தில் பதித்து வைத்தேனே - என்

தனமென்பதும் நீ தானே - முன்

தவத்தால் உனையடந்தேனே


அன்புக்குப் பொருள் நீதானே -என்

ஆனந்தமும் நீதானே

உறவு நீ ஒருவன் தானே - என்

உயிரே உனைப் பிரியேனே

 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

ความคิดเห็น


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page