Aanaagi pennaagi
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aanaagi pennaagi avadhaaram palavaagi
Agilaththil vandha iraivan
Naanaagi neeyaagi naarthisaiyum thaanaagi
Naadagam nigzhththum kalaignan
Oonaagi uyiraagi uyirottamaagi - nam
Unarvil kalandha nannban
Neeraagi nilamaagi neruppaagi kaatraagi
Neduvaanamaana thalaivan
Kaaraagi kanalaagi gana irul pagalaagi
Kadhirmadhiyum aana ilaignan
Ooraagi peraagi ulagaththin oliyaagi
Utravanaay aana valaignan
Thavamaagi sivamaagi thalamaagi moorththiyaay
Thanithanmai vaayndha punidhan
Nalamaagi dhanamaagi naattin uyirpporul
Gnaana thava manidhan
Arulaagi porulaagi aatral miga thotramaay
Avaniyai kaakkum emmaan
Pagalaagi sudaraagi aanandha jothiyaay
Anaiththuyirum eerkkum pemmaan
Munnaagi pinnaagi mukkannam ivanaagi
Moovulagum aalum thalaivan
Mudhalaagi mudivaagi muzhu neramum aagi
Mun vandhu nirkum thozhan
Vazhiyaagi vizhiyaagi vazhikaatum oliyaagi
Vaazhvil perum thunai aanavan
Gadhiyaagi nidhiyaagi karunai sei nadhiyaagi
Kazhalilidam tharuvaanavan
Enadhaagai unadhaagi yezh piravi thodaraagi
Namai aala vandha eesan
Iyalaagi isaiyaagi yezhaiyin vaazhvilIdho edhir nirkum nesan
*********************
ஆணாகி பெண்ணாகி அவதாரம் பலவாகி
அகிலத்தில் வந்த இறைவன்
நானாகி நீயாகி நாற்திசையும் தானாகி
நாடகம் நிகழ்த்தும் கலைஞன்
ஊனாகி உயிராகி உயிரோட்டமாகி - நம்
உணர்வில் கலந்த நண்பன்
நீராகி நிலமாகி நெருப்பாகி காற்றகி
நெடுவானமான தலைவன்
காராகி கனலாகி கன இருள் பகலாகி
கதிர்மதியும் ஆன இளைஞன்
ஊராகி பேராகி உலகத்தின் ஒளியாகி
உற்றவனாய் ஆன வளைஞன்
தவமாகி சிவமாகி தலமாகி மூர்த்தியாய்
தனித்தன்மை வாய்ந்த புனிதன்
நலமாகி தனமாகி நாட்டின் உயிர்ப்பொருள்
ஞானத் தவ மனிதன்
அருளாகி பொருளாகி ஆற்றல் மிக தோற்றமாய்
அவனியை காக்கும் எம்மான்
பகலாகி சுடராகி ஆனந்த ஜோதியாய்
அனைத்துயிரும் ஈர்க்கும் பெம்மான்
முன்னாகி பின்னாகி முக்கண்ணன் இவனாகி
மூவுலகும் ஆளும் தலைவ்ன்
முதலாகி முடிவாகி முழு நேரமும் ஆகி
முன் வந்து நிற்கும் தோழன்
வழியாகி விழியாகி வழிகாட்டும் ஒளியாகி
வாழ்வில் பெரும் துணையானவன்
க்தியாகி நிதியாகி கருணை செய் நதியாகி
கழலலிலிடம் தருவானவன்
எனதாகி உனதாகி ஏழ்பிறவி தொடராகி
நமை ஆள வந்த ஈசன்
இயலாகி இசையாகி ஏழையின் வாழ்வில்
இதோ எதிர் நிற்கும் நேசன்
Comments