Aadum Naayagan
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
ஆடும் நாயகன் அம்பல வாணன்
தேடும் சிறுபிள்ளை நீதானே
நாடு நல்வயல் சூழும் செந்தூரதில்
வீடு கொண்டங்கு வாழ்வோனே
ஊடு பா என உள்ளம் கலந்தபின்
உனது எனது என்றேதேது
ஏடு நாலிலும் எழுதி முடியாத
இலக்கியமே ஓ முருகோனே
வேடுவச்சி அவள் காதல் மயக்கிலே
வேங்கை மரமாகி நின்றோனே
சாடும் விதியிலே சாய்ந்து வீழாமல்
ஷண்முகா தடுத்தாள்பவனே
மேடு பள்ளமாய் வாழ்வு தந்தாலும்
மேன்மகனே நான் உன் பொருளே
ஈடு இணையிலா அன்பை பொழிகின்ற
இறை வடிவே சிவசங்கரனே
Comments