top of page

Rajathi raja sri raja

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Rajathi raja sri raja maarththaanda

Sri Sivashankar bavani varugiraar

dhevathi dhevarellaam thiruvadiyil siram vaiththu

vananguginra dhevan varugiraar

yogaadhi yogakkaaran yaagaththilae avirbaagam

yaetrida idho varugiraar

bogaadhi bogamellaam ali alli tharuginra

purushoththaman bavani varugiraar


veeraadhi veeranaiyum vetri kollum maa veeran

yaanai meedhu bavani varugiraar

sooraadhi sooranivar sootchumamaam manaththilulla

raakshasarai konru vidugiraar

kaamaadhi varkkangal thaanaagavae kazhala

kangalaalae aanai idugiraar

karmaavin baakkiyellaam dharma vazhiyilae kazhiththu

motcham thara idho varugiraar


paalaabishegam kollum pazhani thirukkumaran

pasupola ninrirukkiraar

vaaraadhu vandhu nirkum maa maniyaan ivar saridham

vaayaara pugazhndhu paaduvom

rogaadhi rogamellaam kaanaamalae maraiya

kai thottu aasi tharugiraar

keezhaezhu maelaezhu logangalum vanangi nirkum

keerththi mikka dheivam varugiraar


maalodu ayan thozha mazhu vaiththa kaiyan thozhum

maa mannan thaeril varugiraar

paalodu thaen kalandhu bakthiyudanae aliththu

bagavaanin aasi peruvom

kaalodu thalai varai kanakkatra paambugalai

kailai naadhan vaiththirukkiraar

vaelodu vandhu nirkum paal muga saravananai

kaavalukku vaiththirukkiraar


boologam yaavilum than porpadha thadam padhiththa

poomaeniyan varugiraar

saaloga saaroopa saameeba varamalikkum

Shankaran idho varugiraar

paadhaala logam mudhal vaedhaala ulagam varai

paarvaiyaalae aatchi seigiraar - ivar

paadhaaravindhamadhai naavaara paadi ninraal

baakkiyangal alli tharugiraar



ராஜாதி ராஜ ஸ்ரீ ராஜ மார்த்தாண்ட

ஸ்ரீ சிவசங்கர் பவனி வருகிறார்

தேவாதி தேவரெல்லாம் திருவடியில் சிரம் வைத்து

வணங்குகின்ற தேவன் வருகிறார்

யோகாதி யோகக்காரன் யாகத்திலே அவிர்பாகம்

ஏற்றிட இதோ வருகிறார்

போகாதி போகமெல்லாம் அள்ளி அள்ளித் தருகின்ற

புருஷோத்தமன் பவனி வருகிறார்


வீராதி வீரனையும் வெற்றி கொள்ளும் மாவீரன்

யானை மீது பவனி வருகிறார்

சூராதி சூரனிவர் சூட்சுமமாம் மனத்திலுள்ள

ராக்ஷசரை கொன்று விடுகிறார்

காமாதி வர்க்கங்கள் தானாகவே கழல

கண்களாலே ஆணையிடுகிறார்

கர்மாவின் பாக்கியெல்லாம் தர்ம வழியிலே கழித்து

மோட்சம் தர இதோ வருகிறார்


பாலாபிஷேகம் கொள்ளும் பழனி திருக்குமரன்

பசுபோல நின்றிருக்கிறார்

வாராது வந்து நிற்கும் மாமணியான் இவர் சரிதம்

வாயாரப் புகழ்ந்து பாடுவோம்

ரோகாதி ரோகமெல்லாம் காணாமலே மறைய

கை தொட்டு ஆசி தருகிறார்

கீழேழு மேலேழு லோகங்களும் வணங்கி நிற்கும்

கீர்த்தி மிக்க தெய்வம் வருகிறார்


மாலோடு அயன் தொழ மழு வைத்த கையன் தொழும்

மாமன்னன் தேரில் வருகிறார்

பாலோடு தேன் கலந்து பக்தியுடனே அளித்து

பகவானின் ஆசி பெறுவோம்

காலோடு தலைவரை கணக்கற்ற பாம்புகளை

கைலை நாதன் வைத்திருக்கிறார்

வேலோடு வந்து நிற்கும் பால் முக சரவணனை

காவலுக்கு வைத்திருக்கிறார்


பூலோகம் யாவிலும் தன் பொற்பத தடம் பதித்த

பூமேனியன் வருகிறார்

சாலோக சாரூப சாமீப வரமளிக்கும்

சங்கரன் இதோ வருகிறார்

பாதாள லோகம் முதல் வேதாள உலகம் வரை

பார்வையாலே ஆட்சி செய்கிறார் - இவர்

பாதாரவிந்தமதை நாவார பாடி நின்றால்

பாக்கியங்கள் அள்ளி தருகிறார்


 
 
 

Recent Posts

See All
Rajathi raja sri raja

Rajathi raja sri raja maarththaanda Sri Sivashankar bavani varugiraar dhevathi dhevarellaam thiruvadiyil siram vaiththu vananguginra...

 
 
 
Raja Rajanae

Raja rajanae rajathi rajanae raja gambeeranae vaa dheva dhevanae dhevaathi dhevanae dhivya swaroopanae vaa pari poorana karunakara...

 
 
 
Ramachandra rajanagi

Ramachandra rajanagi syama sundhara krishnanaana vijayalakshmi dhevi maindhan engal shankaram vajra dhega praapthi rasthu enra thandhai...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page