Nithya kalyana perumaal
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nithya kalyana perumaal
neela nayana Sivashankara nedumaal
sathya narayana murthy
saayujya padham tharum avadhaara keerththi
paththu karangal ivan kalkidhaan ennum
palapalakkum azhagu velli kavasam minnum
vairam izhaiththa kreedam aadhi kesavan ennum
vaa vaa enrazhaiththu aasi thara ennum
aniyum peethaambaram eththanai vagaigal
haara varisaigalo eththanai vannangal
aadal paadal dheva logaththaiye minjum
aaraththigal kaana kangalellaam kenjum
niththiya therottam bakthar manam kavarum
eththanai vaadhyangal isai vellam koottum
viththagar vedha gosham engum muzhangi varum
velvi pugai engum soozhndhirukkum
sri vaikundhamo thiru kailaayamo
ena viyakka vaikkum sorkkam adhile
poorana brammamaay sevai saadhiththu
boologa jeevarai kadaithetrave vandha
நித்ய கல்யாண பெருமாள்
நீல நயன சிவசங்கர நெடுமால்
சத்ய நாராயண மூர்த்தி
சாயுஜ்ய பதம் தரும் அவதார கீர்த்தி
பத்து கரங்கள் இவன் கல்கிதான் என்னும்
பளபளக்கும் அழகு வெள்ளிக்கவசம் மின்னும்
வைரமிழைத்த க்ரீடம் ஆதிகேசவன் என்னும்
வா வா என்றழைத்து ஆசி தர எண்ணும்
அணியும் பீதாம்பரம் எத்தனை வகைகள்
ஹார வரிசைகளோ எத்தனை வண்ணங்கள்
ஆடல் பாடல்கள் தேவலோகத்தையே மிஞ்சும்
ஆரத்திகள் காண கண்களெல்லாம் கெஞ்சும்
நித்திய தேரோட்டம் பக்தர் மனம் கவரும்
எத்தனை வாத்யங்கள் இசை வெள்ளம் கூட்டும்
வித்தகர் வேத கோஷம் எங்கும் முழங்கி வரும்
வேள்விப் புகை எங்கும் சூழ்ந்திருக்கும்
ஸ்ரீ வைகுந்தமோ திருக்கைலாயமோ
என வியக்க வைக்கும் சொர்க்கம் அதிலே
பூரண ப்ரம்மமாய் சேவை சாதித்து
பூலோக ஜீவரை கடைத்தேற்றவே வந்த
Comments