Naadagam onru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Naadagam onru nadaththa vandhaay - adhil
vedam ida emai therndheduththaay
paadaganaa nee kural koduththaay - enai
aada vaiththu angu nee nagaiththaay
kadum thuyaril emai aazhththi vittu
karma vinai enru solluginraay
kannaa abayam ena kadharugaiyil - nee
kaadhil vaangaamale senru vittaay
aalaiyil itta karumbenave - naan
alari thudippadhu kaangilaiyo
soolaiyil vaiththenai suduvadhudhaan
Sivashankara sundhara sammadhamo
yedhu thavaru naan seidhirundhaalum - indha
yezhaikkirangi nee vara venum
pannaga sayanaa parandhaamaa - en
baaram un tholil sumaththi vitten
unnai anri oru thunai ariyen - un
ullam ariyavum vazhi ariyen - en
ennam uraiththida mozhi ariyen
yedhudhaan seiguven yaan siriyen [ini]
நாடகம் ஒன்று நடத்த வந்தாய் - அதில்
வேடம் இட எமைத் தேர்ந்தெடுத்தாய்
பாடகனாக நீ குரல் கொடுத்தாய் - எனை
ஆட வைத்து அங்கு நீ நகைத்தாய்
கடுந்துயரில் எமை ஆழ்த்தி விட்டு
கர்ம வினை என்று சொல்லுகின்றாய்
கண்ணா அபயமென கதறுகையில் - நீ
காதில் வாங்காமலே சென்று விட்டாய்
ஆலையில் இட்ட கரும்பெனவே - நான்
அலறித் துடிப்பது காண்கிலையோ
சூளையில் வைத்தெனை சுடுவதுதான்
சிவசங்கரா சுந்தரா சம்மதமோ
ஏது தவறு நான் செய்திருந்தாலும் - இந்த
ஏழைக்கிறங்கி நீ வர வேணும்
பன்னக சயனா பரந்தாமா - என்
பாரம் உன் தோளில் சுமத்தி விட்டேன்
உன்னையன்றி ஒரு துணையறியேன் - உன்
உள்ளம் அறியவும் வழி அறியேன் - என்
எண்ணம் உரைத்திட மொழியறியேன்
ஏதுதான் செய்குவேன் யான் சிறியேன் [ இனி]
Comentarios