Ninradum Mayilaeri
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
நின்றாடும் மயிலேறி வந்தாடும் முருகா
நிலையாத வாழ்வில் என்பலம் நீயே மால் மருகா
மன்றாடும் இதயத்தை அறியாயோ முருகா
மலர்விழியால் ஆசிகளைத் தருவாயோ முருகா
கன்றழைக்கும் குரல் கேட்டுக் கனிந்தே வா முருகா
கதறும் என் நிலை மாற்ற விரைந்தே வா முருகா
பந்தாடும் என் வினையை அழிப்பாயோ முருகா
பரிவோடு வந்துஎனை அணைப்பாயோ ஷண்முகா
Comments