Nilaiyaadha vaazhvu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nilaiyaadha vaazhvu thanil aadi unnai
ninaiyaadhirundha siru yezhai
silaiyaaga nirka vilaiyaadi nenjil
siru paadham vaiththa vadivelaa
tholaiyaadha selvam thara vendi pinne
thodarndhodi vandha arulaalaa
valaiyonru pinni vagaiyaaga ullam
vayamaakki konda sivabaalaa
ulaipol kodhiththa unarvil thudiththu
urugi thaviththa idhu neram
alaimel thuyinra arangan anaiththa
marugaa enakku arulvaaye
kalaiyonru thandhu vilaiyaaga ullam
kalavaadi senra kadhir velaa
malaiyil kudavarai kazhukaasalaththin
manamaay niraindha perumaale
நிலையாத வாழ்வு தனில் ஆடி உன்னை
நினையாதிருந்த சிறு ஏழை
சிலையாக நிற்க விளையாடி நெஞ்சில்
சிறு பாதம் வைத்த வடிவேலா
தொலையாத செல்வம் தர வேண்டி பின்னே
தொடர்ந்தோடி வந்த அருளாளா
வலையொன்று பின்னி வகையாக உள்ளம்
வயமாக்கிக் கொண்ட சிவபாலா
உலைபோல் கொதித்த உணர்வில் துடித்து
உருகித் தவித்த இது நேரம்
அலைமேல் துயின்ற அரங்கன் அணைத்த
மருகா எனக்கு அருள்வாயே
கலையொன்று தந்து விலையாக உள்ளம்
களவாடிச் சென்ற கதிர் வேலா
மலையில் குடவரை கழுகாசலத்தின்
மணமாய் நிறைந்த பெருமாளே
Comments