Netriyile kombu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Netriyile kombu mulaiththavan sonnaal sonnadhu dhaan - ivan
vetrikkodi ulagengum parappadhu nichchayam nichchayam thaan
utru paarththum kuraigal kaana mudiyuma sodharare
ulage ivanin keezh vara pogudhu saththiyam saththiyam thaan
patrum paasamum vittu vittaan nammaal mudiyuma
bakthiyil thannai pudam pottaane namakkum iyaluma
putru noyum atru pogudhu ingu theriyuma
purindhirundhum thappu kanakku podureer idhuvum nyaayama
kolgai ennum kambi mele thaane nadakkiraan - mugam
konaamal kobam kollaamal eppodhum irukkiraan
palkalai kazhagamaay thanadhu koyilai maatri irukkiraan
payan perum vazhimurai palavum solli namai dhinamum thiruthuraan
mukthikku namai kootti sellaththaane thavikkiraan
moodathanangalai moottai kattu enru uraikkiraan - than
shakthiyinaale sanjalamellaam thaane arukkiraan
sanmaarkam ennum sariththiram allavo ivanum padaikkiraan
thirandha puththagamaaga allavo ivanum irukkiraan - namai
thiruththa thaane oayvu kolaamal dhinamum uzhaikkiraan - idhai
purindhu kollaadha ulaga pokkirku vaiththom oru ellai - indha
unmaiyai ulagam ariyum naal vegu thooraththil illai
நெற்றியிலே கொக்ம்பு முளைத்தவன் சொன்னால் சொன்னதுதான் - இவன்
வெற்றிக்கொடி உலகெங்கும் பறப்பது நிச்சயம் நிச்சயம் தான்
உற்றுப் பார்த்தும் குறைகள் காண முடியுமா சோதரரே
உலகே இவனின் கீழ் வரப் போகுது சத்தியம் சத்தியம்தான்
பற்றும் பாசமும் விட்டு விட்டான் நம்மால் முடியுமா
பக்தியில் தன்னை புடம் போட்டானே நமக்கும் இயலுமா
புற்று நோயும் அற்றுப் போகுது இங்கு தெரியுமா
புரிந்திருந்தும் தப்பு கணக்கு போடுறீர் இதுவும் நியாயமா
கொள்கை என்னும் கம்பி மேலே தானே நடக்கிறான் - முகம்
கோணாமல் கோபம் கொள்ளாமல் எப்போதும் இருக்கிறான்
பல்கலை கழகமாய் தனது கோயிலை மாற்றி இருக்கிறான்
பயன் பெறும் வழிமுறை பலவும் சொல்லி நமை தினமும் திருத்துறான்
முக்திக்கு நமை கூட்டிச் செல்லத் தானே தவிக்கிறான்
மூடத்தனங்களை மூட்டை கட்டு என்று உரைக்கிறான் - தன்
சக்தியினாலே சஞ்சலமெல்லாம் தானே அறுக்கிறான்
சன்மார்க்கம் என்னும் சரித்திரமல்லவோ இவனும் படைக்கிறான்
திறந்த புத்தகமாக அல்லவோ இவனும் இருக்கிறான் - நமை
திருத்தத்தானே ஓய்வு கொள்ளாமல் தினமும் உழைக்கிறான் - இதை
புரிந்து கொள்ளாத உலக போக்கிற்கு வைத்தோம் ஒரு எல்லை - இந்த
உண்மையை உலகம் அறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை
留言