Neruppin mel
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Neruppin mel ee moikka mudiyuma - engal
nedumaalai alandhu vida mudiyuma
poruppillaa pechchu idharku udhavumaa - engal
pemmaan uyaram ummaal etta mudiyuma - Siva
thaduppu suvar illaadha aanmeegam - idhu
dharmaththile pirazhaadha aanmeegam
eduppar kai pillai illai aanmeegam
yendhum kaikku tharuvadhallo aanmeegam
appan paattan soththu alla aanmeegam
aanavaththin sigaram alla aanmeegam - idhu
kuppanodu suppan uyarum aanmeegam - yedhum
kurai kaana mudiyaadha aanmeegam
thavaththinaale vandhadhindha aanmeegam - nirkum
thalamum kodi punniyam tharum aanmeegam
sivaththin araththai petru vandha aanmeegam - idhu
sinamennum gunam marandha aanmeegam
oppuvamai illaadha aanmeegam
uyya vazhi kaatum ivar aanmeegam
pizhaippu thedi tharuginra aanmeegam - evarum
pirindhirukka iyalaadha aanmeegam
vedam yedhum poonaadha aanmeegam - ulaga
vetkaigalai kuraikkum ivar aanmeegam
vedha velvi nigazhthuginra aanmeegam - evarkkum
bedhamedhum kaattaadha aanmeegam
undi vasool illaadha aanmeegam
ulagamellaam thalai vanangum aanmeegam
thondu seyya purappatta aanmeegam - idhu
tholai thoora nokku konda aanmeegam
ilaignargalai onru koottum aanmeegam - avarai
irumbu manidhanaakki vidum aanmeegam
edhir kaala bharadhaththin aanmeegam - evarum
edhir nirka mudiyaadha aanmeegam
anbu ennum koorai konda aanmeegam
aadharavu karam neettum aanmeegam
vinnavarum viyakkinra aanmegam - engal
vendhan Sivashankaranin aanmeegam
நெருப்பின் மேல் ஈ மொய்க்க முடியுமா - எங்கள்
நெடுமாலை அளந்து விட முடியுமா
பொருப்பில்லா பேச்சு இதற்கு உதவுமா - எங்கள்
பெம்மான் உயரம் உம்மால் எட்ட முடியுமா - சிவ
தடுப்பு சுவர் இல்லாத ஆன்மீகம் - இது
தர்மத்திலே பிறழாத ஆன்மீகம்
எடுப்பார் கை பிள்ளை இல்லை ஆன்மீகம்
ஏந்தும் கைக்கு தருவதல்லோ ஆன்மீகம்
அப்பன் பாட்டன் சொத்து அல்ல ஆன்மீகம்
ஆணவத்தின் சிகரமல்ல ஆன்மீகம் - இது
குப்பனோடு சுப்பன் உயரும் ஆன்மீகம் - ஏதும்
குறை காண முடியாத ஆன்மீகம்
தவத்தினாலே வந்ததிந்த ஆன்மீகம் - நிற்கும்
தளமும் கோடி புண்ணியம் தரும் ஆன்மீகம்
சிவத்தின் அறத்தை பெற்று வந்த ஆன்மீகம் - இது
சினமென்னும் குணம் மறந்த ஆன்மீகம்
ஒப்புவமை இல்லாத ஆன்மீகம்
உய்ய வழி காட்டும் இவர் ஆன்மீகம்
பிழைப்பு தேடி தருகின்ற ஆன்மீகம் - எவரும்
பிரிந்திருக்க இயலாத ஆன்மீகம்
வேடமேதும் பூணாத ஆன்மீகம் - உலக
வேட்கைகளை குறைக்கும் இவர் ஆன்மீகம்
வேத வேள்வி நிகழ்த்துகின்ற ஆன்மீகம் - எவர்க்கும்
பேதமேதும் காட்டாத ஆன்மீகம்
உண்டி வசூல் இல்லாத ஆன்மீகம்
உலகமெல்லாம் தலை வணங்கும் ஆன்மீகம்
தொண்டு செய்ய புறப்பட்ட ஆன்மீகம் - இது
தொலை தூர நோக்கு கொண்ட ஆன்மீகம்
இளைஞர்களை ஒன்று கூட்டும் ஆன்மீகம் - அவரை
இரும்பு மனிதனாக்கி விடும் ஆன்மீகம்
எதிர்கால பாரதத்தின் ஆன்மீகம் - எவரும்
எதிர் நிற்க முடியாத ஆன்மீகம்
அன்பு என்னும் கூரை கொண்ட ஆன்மீகம்
ஆதரவுக் கரம் நீட்டும் ஆன்மீகம்
விண்ணவரும் வியக்கின்ற ஆன்மீகம் - எங்கள்
வேந்தன் சிவசங்கரனின் ஆன்மீகம்
Comments