top of page

Nenja gugaiyile

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Nenja gugaiyile ninravane

nere gugai vandhamarndhanaiyo

konjamum bakthi ariyaarkkum

konji kulava unai thandhanaiyo

anji aratri kidandha ennai

abayam thandhu aat kondanaiyo - naan

kenji azhudhu pulambiyadhai

kettuththan urugi vandhanaiyo


sidhdhargal kodi soozhndhirukka

Shankara thavaththil amarndhanaiyo

sutriye naagangal kaaval nirka

sootchumamaaga ulavuvaiyo

raththina sabaiyin magaraasane

ratchikkave oadi vandhanaiyo

uththamaa un paadha poojai seyya

eththani thavangal seidhanano


kallaala maramum kilai padarum

karunaiyin vergal paravi varum

kollenru malargal adhil pookkum

poomaan un thol maalai thanil sirikkum

oangaara saththam paravi nirkum - adhan

ulle un naamam oliththirukkum

reenkaaram seidhu vandisaikkum - adhan

ridhaththile nin paadham nadanamidum


Shankara Shankara enrurugi

saamaththilum unai paadiduven

sannidhi thannil nuzhaindhadhume

santhosha saagarathaadiduven

gangai soodum jadaadharane

karunaakaraa oh umai baagane - un

anga asaivukku adi paniven - un

anbu pinaippil kattundiruppen


நெஞ்சக் குகையிலே நின்றவனே

நேரே குகை வந்தமர்ந்தனையோ

கொஞ்சமும் பக்தி அறியார்க்கும்

கொஞ்சிக் குலவ உனை தந்தனையோ

அஞ்சி அரற்றி கிடந்த என்னை

அபயம் தந்து ஆட் கொண்டனையோ - நான்

கெஞ்சி அழுது புலம்பியதை

கேட்டுத்தான் உருகி வந்தனையோ


சித்தர்கள் கோடி சூழ்ந்திருக்க

சங்கரா தவத்தில் அமர்ந்தனையோ

சுற்றியே நாகங்கள் காவல் நிற்க

சூட்சுமமாக உலவுவையோ

ரத்தின சபையின் மகராசனே

ரட்சிக்கவே ஓடி வந்தனையோ

உத்தமா உன் பாத பூஜை செய்ய

எத்தனை தவங்கள் செய்தனனோ


கல்லால மரமும் கிளை படரும்

கருணையின் வேர்கள் பரவி வரும்

கொல்லென்று மலர்கள் அதில் பூக்கும்

பூமான் உன் தோள் மாலை தனில் சிரிக்கும்

ஓங்கார சத்தம் பரவி நிற்கும் - அதன்

உள்ளே உன் நாமம் ஒலித்திருக்கும்

ரீங்காரம் செய்து வண்டிசைக்கும் - அதன்

ரிதத்திலே நின் பாதம் நடனமிடும்


சங்கரா சங்கரா என்றுருகி

சாமத்திலும் உனை பாடிடுவேன்

சந்நிதி தன்னில் நுழைந்ததுமே

சந்தோஷ சாகரத்தாடிடுவேன்

கங்கை சூடும் ஜடாதரனே

கருணாகரா ஓ உமை பாகனே - உன்

அங்க அசைவுக்கு அடி பணிவேன் - உன்

அன்பு பிணைப்பில் கட்டுண்டிருப்பேன்

 
 
 

Recent Posts

See All
Naadagam onru

Naadagam onru nadaththa vandhaay - adhil vedam ida emai therndheduththaay paadaganaa nee kural koduththaay - enai aada vaiththu angu nee...

 
 
 
Naadha vadivinale

Naadha vadivinale - Sivashankariye sanaadhaniye jagathkaaraniye modhaga priyan magizh mohanavalli saamagaana boshani subashini sathya...

 
 
 
Naan enru maraindhu

Naan enru maraindhu neeyaaguven - irai gnaaname naan undhan seyaaguven paalodu neer serndhaal paalaagume parane unnodinaindhaal param...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page