Neeye en aadhaara
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Neeye en aadhaara sruthiyaanaval
nizhalaagi thunaiyaagi nidhiyaanaval
karuvaakki uru thandhu uyiraanaval
kalangaamal enai kaakkum thaayaanaval
thalamakki en nenjil thaan ninraval
dhayaiyaale thavam seyya enai vaiththaval
valamaana vaazhvukku vazhi aanaval
varam thandhu aatkonda vizhi meenaval
karpagam ena vandha karunaakari - en
kanavile kaatchi thandha Sivashankari
porpadha pugal thandhu enai aadhari - un
poo vizhi malarndharulvaay hari sodhari
நீயே என் ஆதார ஸ்ருதியானவள்
நிழலாகித் துணையாகி நிதியானவள்
கருவாக்கி உரு தந்து உயிரானவள்
கலங்காமல் எனைக் காக்கும் தாயானவள்
தளமாக்கி என் நெஞ்சில் தான் நின்றவள்
தயையாலே தவம் செய்ய எனை வைத்தவள்
வளமான வாழ்வுக்கு வழி ஆனவள்
வரம் தந்து ஆட்கொண்ட விழி மீனவள்
கற்பகம் என வந்த கருணாகரி - என்
கனவிலே காட்சி தந்த சிவசங்கரி
பொற்பத புகல் தந்து எனை ஆதரி - உன்
பூவிழி மலர்ந்தருள்வாய் ஹரி சோதரி
Comentarios