top of page

Neelaankaraiyinile

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Neelaankaraiyinile niththam thavam irundhen

naalaa puraththinilum un naamam jebithirundhen

thozhaa Shankarane pudhu vaazhvu thandharulvaay

melaam chennaiyile pudhu koyil kondaaye


naiyaa nenjinaiyum naiyumpadi urukkum

aiya Shankarane unaiye manadhil vaiththen

meyyaa! jodhiyane pudhu vaazhvu thandharulvaay

poyya chennaiyile pudhu koyil kondaaye


utraar yaarumillai unnai charanadaindhen

katraa ena ninaiththe ennai kaaththal un kadane

katraar sigaamaniye pudhu vaazhvu thandharulvaay

vatraa chennaiyile pudhu koyil kondaaye


thaayaay nee irundhaay ellaa jaadhiyarum

thooyaay un madimel amarndhe kaliththirundhaar

maayaa! maalavane pudhu vaazhvu thandharulvaay

saayaa chennaiyile pudhu koyil kondaaye


thanjam enrirundhen unnai thaane nambi ninren

thunjum velaiyilum nenjam iruththi vaiththen

konjum Shankarane pudhu vaazhvu thandharulvaay

vinjum chennaiyile pudhu koyil kondaaye


ennaal yedhumillai ini neeye enrirundhen

thennaa then podhigai thiru dhevan aanavane

ponnaar meniyane pudhu vaazhvu thandharulvaay

pannaar chennaiyile pudhu koyil kondaaye


நீலாங்கரையினிலே நித்தம் தவமிருந்தேன்

நாலா புறத்தினிலும் உன் நாமம் ஜபித்திருந்தேன்

தோழா சங்கரனே புது வாழ்வு தந்தருள்வாய்

மேலாம் சென்னையிலே புதுக் கோயில் கொண்டாயே


நையா நெஞ்சினையும் நையும்படி உருக்கும்

ஐயா சங்கரனே உனையே மனதில் வைத்தேன்

மெய்யா! ஜோதியனே புது வாழ்வு தந்தருள்வாய்

பொய்யாச் சென்னையிலே புதுக் கோயில் கொண்டாயே


உற்றார் யாருமில்லை உன்னைச் சரணடைந்தேன்

கற்றா என நினைத்தே என்னைக் காத்தல் உன் கடனே

கற்றார் சிகாமணியே புது வாழ்வு தந்தருள்வாய்

வற்றாச் சென்னையிலே புதுக் கோயில் கொண்டாயே


தாயாய் நீ இருந்தாய் எல்லா ஜாதியரும்

தூயாய் உன் மடிமேல் அமர்ந்தே களித்திருந்தார்

மாயா! மாலவனே புது வாழ்வு தந்தருள்வாய்

சாயாச் சென்னையிலே புதுக் கோயில் கொண்டாயே


தஞ்சம் என்றிருந்தேன் உன்னைத்தானே நம்பி நின்றேன்

துஞ்சும் வேளையிலும் நெஞ்சம் இருத்தி வைத்தேன்

கொஞ்சும் சங்கரனே புது வாழ்வு தந்தருள்வாய்

விஞ்சும் சென்னையிலே புதுக் கோயில் கொண்டாயே


என்னால் ஏதுமில்லை இனி நீயே என்றிருந்தேன்

தென்னா தென் பொதிகைத் திருத்தேவன் ஆனவனே

பொன்னார் மேனியனே புது வாழ்வு தந்தருள்வாய்

பண்ணார் சென்னையிலே புதுக் கோயில் கொண்டாயே


 
 
 

Recent Posts

See All
Naadagam onru

Naadagam onru nadaththa vandhaay - adhil vedam ida emai therndheduththaay paadaganaa nee kural koduththaay - enai aada vaiththu angu nee...

 
 
 
Naadha vadivinale

Naadha vadivinale - Sivashankariye sanaadhaniye jagathkaaraniye modhaga priyan magizh mohanavalli saamagaana boshani subashini sathya...

 
 
 
Naan enru maraindhu

Naan enru maraindhu neeyaaguven - irai gnaaname naan undhan seyaaguven paalodu neer serndhaal paalaagume parane unnodinaindhaal param...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page