top of page

Neela mega koottam

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 2 min read

Neela mega koottam kandaal undhan meni gnaabagam

neliyum thenral ennai varuda nee theendum gnaabagam

kola kuyilin gaanam kettaal un kuzhal oasai gnaabagam

konjum kili mazhalaiyile en kuzhandhai undhan gnaabagam


aadum mayilai kandaal neeyum asaindhu varum gnaabagam

aarkkum alaiyai kaanum podhun anantha sayanan gnaabagam

aruvi thulli varudhal kandaal undhan pechchu gnaabagam

aazh manaththil padhindhadhu neeyena aaththumaavil gnaabagam


vatta nilavil un mugam ennai etti paarththa gnaabagam

vaana villin jaalamellaam un vaazhvil seidha gnaabagam

unavu unna amarumpodhu un mugame gnaabagam - naan

ootti vida vandhaal neeyum oodal seyyum gnaabagam


kanavu onru kandaal adhil un kaatchi thaane gnaabagam

kaatchi tharum iyarkai thannil kadavule un gnaabagam

uyarndha malaiyin sigaram kandaal undhan anbe gnaabagam

ulagil mazhai vellam kandaal nee udhirkkum varangal gnaabagam


puththam pudhu malargal kandaal un punnagaidhaan gnaabagam

sidhdhane en sindhaiyile un thathuvangal gnaabagam

ulagin maayai alaikazhithaalum en ulle undhan gnaabagam

ulagai marandhu undhan madiyil urangudhal pol gnaabagam


charanam ena naan koovaiyile un thiruvadidhaan gnaabagam

shanthi vendi thaviththidum podhun sannidhidhaan gnaabagam

vaanil kadhirum udhikkum podhun varugaidhaane gnaabagam

vandu suzhanru parakkaiyile un vaanjai vizhigal gnaabagam


eththisaiyil senraalum nee thodarvadhaaga gnaabagam - en

yezhpiravi thavamo Sri Sivashankara un gnaabagam

maranam theenda vandhidum munne varanum undhan gnaabagam - ini

jananam venden swami jagath kaaranane gnaabagam



நீல மேகக் கூட்டம் கண்டால் உந்தன் மேனி ஞாபகம்

நெளியும் தென்றல் என்னை வருட நீ தீண்டும் ஞாபகம்

கோலக் குயிலின் கானம் கேட்டால் உன் குழல் ஓசை ஞாபகம்

கொஞ்சும் கிளி மழலையிலே என் குழந்தை உந்தன் ஞாபகம்


ஆடும் மயிலைக் கண்டால் நீயும் அசைந்து வரும் ஞாபகம்

ஆர்க்கும் அலையைக் காணும் போதுன் அனந்த சயனம் ஞாபகம்

அருவி துள்ளி வருதல் கண்டால் உந்தன் பேச்சு ஞாபகம்

ஆழ்மனத்தில் பதிந்தது நீயென ஆத்துமாவில் ஞாபகம்


வட்ட நிலவில் உன் முகம் என்னை எட்டிப் பார்த்த ஞாபகம்

வானவில்லின் ஜாலமெல்லாம் உன் வாழ்வில் செய்த ஞாபகம்

உணவு உண்ண அமரும்போது உன் முகமே ஞாபகம் - நான்

ஊட்டி விட வந்தால் நீயும் ஊடல் செய்யும் ஞாபகம்


கனவு ஒன்று கண்டால் அதில் உன் காட்சி தானே ஞாபகம்

காட்சி தரும் இயற்கை தன்னில் கடவுளே உன் ஞாபகம்

உயர்ந்த மலையின் சிகரம் கண்டால் உந்தன் அன்பே ஞாபகம்

உலகில் மழை வெள்ளம் கண்டால் நீ உதிர்க்கும் வரங்கள் ஞாபகம்


புத்தம் புது மலர்கள் கண்டால் உன் புன்னகைதான் ஞாபகம்

சித்தனே என் சிந்தையிலே உன் தத்துவங்கள் ஞாபகம்

உலகின் மாயை அலைக்கழித்தாலும் என் உள்ளே உந்தன் ஞாபகம்

உலகை மறந்து உந்தன் மடியில் உறங்குதற்போல் ஞாபகம்


சரணம் என நான் கூவையிலே உன் திருவடிதான் ஞாபகம்

சாந்தி வேண்டித் தவித்திடும் போதுன் சந்நிதிதான் ஞாபகம்

வானில் கதிரும் உதிக்கும் போதுன் வருகைதானே ஞாபகம்

வண்டு சுழன்று பறக்கையிலே உன் வாஞ்சை விழிகள் ஞாபகம்


எத்திசையில் சென்றாலும் நீ தொடர்வதாக ஞாபகம் - என்

ஏழ்பிறவித் தவமோ ஸ்ரீ சிவசங்கரா உன் ஞாபகம்

மரணம் தீண்ட வந்திடும் முன்னே வரணும் உந்தன் ஞாபகம் - இனி

ஜனனம் வேண்டேன் ஸ்வாமி ஜகத் காரணனே ஞாபகம்

 
 
 

Recent Posts

See All
Naadagam onru

Naadagam onru nadaththa vandhaay - adhil vedam ida emai therndheduththaay paadaganaa nee kural koduththaay - enai aada vaiththu angu nee...

 
 
 
Naadha vadivinale

Naadha vadivinale - Sivashankariye sanaadhaniye jagathkaaraniye modhaga priyan magizh mohanavalli saamagaana boshani subashini sathya...

 
 
 
Naan enru maraindhu

Naan enru maraindhu neeyaaguven - irai gnaaname naan undhan seyaaguven paalodu neer serndhaal paalaagume parane unnodinaindhaal param...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page