Nee thavam seyyum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nee thavam seyyum azhago thamizhazhagu - asurarai
vadham seyyum azhago thani azhagu
nee sivam kaattum azhago kalai azhagu - emmai
dhinam meettum azhago kavi azhagu
nin thiruppaadham dheiveega perazhagu - nin
thirukkaalil thamizh paattin seer azhagu
thondar idai ninru pazhaguvadhaal idai azhagu
lakshmi inaithirukkum idhayamthaan kodai azhagu
dhushtargalai nadunga vaikkum tholl azhagu - thooya
kalaivaani nadam puriyam naavazhagu
ashtamaa siththigalin ani azhagu - nee
ayaraamal dhinam aatrum pani azhagu
nin thiruvaasi thiruvaatchi enum azhagu - pesum
thirukkangal ruthraatcha mani azhagu - en
thalaivaa nin thalai ulagin thalai azhagu - gnaana
swara oattam melongum nilai azhagu
nee vinai theerkkum azhago thaayazhagu - konji
vilaiyaadum azhago seyazhagu - nin
ani serum thondarellaam ani azhagu
nee aanmeega varalaatrin asal azhagu
நீ தவம் செய்யும் அழகோ தமிழழகு - அசுரரை
வதம் செய்யும் அழகோ தனியழகு
நீ சிவம் காட்டும் அழகோ கலையழகு - எம்மை
தினம் மீட்டும் அழகோ கவியழகு
நின் திருப்பாதம் தெய்வீக பேரழகு - நின்
திருக்காலில் தமிழ்ப்பாட்டின் சீரழகு
தொண்டர் இடை நின்று பழகுவதால் இடை அழகு
லக்ஷ்மி இணைந்திருக்கும் இதயம்தான் கொடையழகு
துஷ்டர்களை நடுங்க வைக்கும் தோளழகு - தூய
கலைவாணி நடம் புரியும் நாவழகு
அஷ்டமா சித்திகளின் அணியழகு - நீ
அயராமல் தினம் ஆற்றும் பணி அழகு
நின் திருவாசி திருவாட்சி எனும் அழகு - பேசும்
திருக்கண்கள் ருத்ராட்ச மணி அழகு - என்
தலைவா நின் தலை உலகின் தலை அழகு - ஞான
ஸ்வர ஓட்டம் மேலோங்கும் நிலை அழகு
நீ வினை தீர்க்கும் அழகோ தாயழகு - கொஞ்சி
விளையாடும் அழகோ சேயழகு - நின்
அணி சேரும் தொண்டரெல்லாம் அணியழகு
நீ ஆன்மீக வரலாற்றின் அசல் அழகு
Comments