Nanri solla vendum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nanri solla vendum - unakku
nanri solla vendum
eththanai idargal vandhaalum emai
kaaththidum Shankara unakku - naan
nanri solla vendum
kaalaiyilum pagal maalaiyilum naan
nanri solla vendum
unnum podhum urangum podhum
nanri solla vendum
enniya ennam eedearum podhum
nanri solla vendum - adhai
enni enni en manam magizhndhidum podhum
nanri solla vendum
piraviyil uyarndha piravi thaan indha
manidha piravi thandha unakkum
nanri solla vendum
sariththiram padaikkum naayagaa undhan
arugil irukka vaiththaay adharkum
nanri solla vendum
ennai koduththu unnai adaiya
iyalumo enru thaviththa samayam
enakkulthaane neeyum irukkiraay
enbadhai unara vaiththaay
adharkum nanri solla vendum
நன்றி சொல்ல வேண்டும் - உனக்கு
நன்றி சொல்ல வேண்டும்
எத்தனை இடர்கள் வந்தாலும்
எமை காத்திடும் சங்கரா உனக்கு நான்
நன்றி சொல்ல வேண்டும்
காலையிலும் பகல் மாலையிலும் நான்
நன்றி சொல்ல வேண்டும்
உண்ணும் போதும் உறங்கும் போதும்
நன்றி சொல்ல வேண்டும்
எண்ணிய எண்ணம் ஈடேறும் போதும்
நன்றி சொல்ல வேண்டும் அதை
எண்ணி எண்ணி என் மனம் மகிழ்ந்திடும் போதும்
நன்றி சொல்ல வேண்டும்
பிறவியில் உயர்ந்த பிறவிதான் இந்த
மனித பிறவி தந்த உனக்கும்
நன்றி சொல்ல வேண்டும்
சரித்திரம் படைக்கும் நாயகா உந்தன்
அருகில் இருக்க வைத்தாய் அதற்கும்
நன்றி சொல்ல வேண்டும்
என்னை கொடுத்து உன்னை அடைய
இயலுமோ என்று தவித்த சமயம்
எனக்குள்தானே நீயுமிருக்கிறாய்
என்பதை உணர வைத்தாய்
அதற்கும் நன்றி சொல்ல வேண்டும்
Comentarios