Naadha thaththuvame
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Naadha thaththuvame nataraaja narththaname
oadhu saththiyame oliyongu niththiyame
vedha viththagame siva bodha chiththirame
aadhi arpudhame arul gnaanam kittidumo
sogamatravane siva jothi utravane
yaaga natravane kalai yaavum katravane
mogamatravane thamizh dhaagam utravane
yoga viththagane arul gnaanam kittidumo
vaalaiyin magane sudar vaanavar maniye
solaiyin malare muzhu jothiyin nilave
kaalaiyin kadhire unai kaana vandhanme
maalavan vadive arul gnaanam kittidumo
aaranam ariyen oru aagamam araiyen
kaaranam aariyen oru kaariyam airyen
vaaranam kadhara arul neril thandhavane
naarana vadive arul gnaanam kittidumo
vaana indhirane sivan soodu chandhirane
moona sundharane gurunaadha mandhirane
gnaana pandidhanaar ani maarbin chandhaname
dheena ratchagane arul gnaanam kittidumo
syaama sundharane oru kodi thandhirane
soma sundharane arul paadha pangayane
raama sundharane ilandheva shankarane
naama mangalane arul gnaanam kittidumo
நாத தத்துவமே நடராஜ நர்த்தனமே
ஓது சத்தியமே ஒளியோங்கு நித்தியமே
வேத வித்தகமே சிவபோத சித்திரமே
ஆதி அற்புதமே அருள் ஞானம் கிட்டிடுமோ
சோகமற்றவனே சிவ ஜோதி உற்றவனே
யாக நற்றவனே கலை யாவும் கற்றவனே
மோகமற்றவனே தமிழ்த் தாகம் உற்றவனே
யோக வித்தகனே அருள் ஞானம் கிட்டிடுமோ
வாலையின் மகனே சுடர் வானவர் மணியே
சோலையின் மலரே முழு ஜோதியின் நிலவே
காலையின் கதிரே உனைக் காண வந்தனமே
மாலவன் வடிவே அருள் ஞானம் கிட்டிடுமோ
ஆரணம் அறியேன் ஒரு ஆகமம் அறியேன்
காரணம் அறியேன் ஒரு காரியம் அறியேன்
வாரணம் கதற அருள் நேரில் தந்தவனே
நாரண வடிவே அருள் ஞானம் கிட்டிடுமோ
வான இந்திரனே சிவன் சூடு சந்திரனே
மோன சுந்தரனே குருநாத மந்திரனே
ஞான பண்டிதனார் அணி மார்பின் சந்தனமே
தீன ரட்சகனே அருள் ஞானம் கிட்டிடுமோ
சியாம சுந்தரனே ஒருகோடி தந்திரனே
சோம சுந்தரனே அருட்பாத பங்கயனே
ராம சுந்தரனே இளந்தேவ சங்கரனே
நாம மங்கலனே அருள் ஞானம் கிட்டிடுமோ
Comments