Dhevan Bhavani
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 4 min read
Updated: Jun 28, 2020
Audio:
Dhevan bavani varuvadhai paar - thanga
theril bavani varuvadhai paar
yeval seyya vandha kolgalellaam adhai
yelelo paadi izhuppadhai paar
dhevargal vanna kudai pidikka
dhevaara panngalum angisaikka
moovarum vaazhthiye kai asaikka
munivan bavani varuvadhai paar
sangu muzhangiye boom boom ena
saasthira andhanar om om ena
vanga kadal alai aahaa ena
Shankaran bavani varuvadhai paar
vaasalil thoranam vaa vaa ena
vanna kolangal pala palena
vaadhiya oasaigal dheem dheem ena
vallal bavani varuvadhai paar
koyil yaanai maalai yendhi vara
kottu muzhakkangal munne vara
aagaayam poo mazhai thoovi vara
aadhi shankaran bavaniyai paar
chandhira sooriyar mundhi vara
sarppangal nelindhu aadi vara
indhiran kattiyam koori vara
endhai bavani varuvadhai paar
vaayuvum saamaram veesi vara
varunan panneer thelithu vara
aggini pandham pidithu vara
aagaayam mannum azhagu pera
vaana vedikkaiyin vannangalai kandu
vaanavil thayangi nirpadhai paar
gaana mazhiyai pozhindhume naaradhan
thaane mayangi thigaippadhai paar
theruvile maandhar varisaigal paar - tham
thevai anaiaththum peruvadhai paar
karuvin madhalai asaindhasaindhu - idhai
kaana virumbidum aavalai paar
panja boodhangalum sevai seyya
paraman theril varum aanandham paar
manjal mugaththu pendirgalellaam
mangala aarathi seivadhai paar
தேவன் பவனி வருவதைப் பார் - தங்கத்
தேரில் பவனி வருவதைப் பார்
ஏவல் செய்ய வந்த கோள்களெல்லாம் அதை
ஏலேலோ பாடி இழுப்பதைப் பார்
தேவர்கள் வண்ணக் குடை பிடிக்க
தேவாரப் பண்களும் அங்கிசைக்க
மூவரும் வாழ்த்தியே கை அசைக்க
முனிவன் பவனி வருவதைப் பார்
சங்கு முழங்கியே பூம் பூம் என
சாஸ்திர அந்தணர் ஓம் ஓம் என
வங்கக் கடல் அலை ஆஹா என
சங்கரன் பவனி வருவதைப் பார்
வாசலில் தோரணம் வா வா என
வண்ணக் கோலங்கள் பள பளென
வாத்திய ஓசைகள் தீம் தீம் என
வள்ளல் பவனி வருவதைப் பார்
கோயில் யானை மாலை ஏந்தி வர
கொட்டு முழக்கங்கள் முன்னே வர
ஆகாயம் பூ மழை தூவி வர
ஆதி சங்கரன் பவனியைப் பார்
சந்திர சூரியர் முந்தி வர
சர்ப்பங்கள் நெளிந்து ஆடி வர
இந்திரன் கட்டியம் கூறி வர
எந்தை பவனி வருவதைப் பார்
வாயுவும் சாமரம் வீசி வர
வருணன் பன்னீர் தெளித்து வர
அக்கினி பந்தம் பிடித்து வர
ஆகாயம் மண்ணும் அழகு பெற
வாண வேடிக்கையின் வண்ணங்களைக் கண்டு
வானவில் தயங்கி நிற்பதைப் பார்
கான மழையைப் பொழிந்துமே நாரதன்
தானே மயங்கித் திகைப்பதைப் பார்
தெருவிலே மாந்தர் வரிசைகள் பார் - தம்
தேவை அனைத்தும் பெறுவதைப் பார்
கருவின் மதலை அசைந்தசைந்து - இதைக்
காண விரும்பிடும் ஆவலைப் பார்
பஞ்ச பூதங்களும் சேவை செய்ய
பரமன் தேரில் வரும் ஆனந்தம் பார்
மஞ்சள் முகத்துப் பெண்டிர்களெல்லாம்
மங்கள ஆரத்தி செய்வதைப் பார்
Meaning
தேவன் பவனி வருவதைப் பார் - தங்கத்
(Dhevan bavani varuvadhai paar - thanga)
Behold the Lord in procession - in golden
தேரில் பவனி வருவதைப் பார்
(theril bavani varuvadhai paar)
Chariot He’s coming in procession,look
ஏவல் செய்ய வந்த கோள்களெல்லாம் அதை
(yeval seyya vandha kolgalellaam adhai)
the planets that came to serve
ஏலேலோ பாடி இழுப்பதைப் பார்
(yelelo paadi izhuppadhai paar)
is pulling it with repetitive songs
Summary 1
Behold ! Lord is coming in procession in a golden chariot pulled by the planets who have come to serve.
தேவர்கள் வண்ணக் குடை பிடிக்க
(dhevargal vanna kudai pidikka)
Celestials are holding colourful umbrellas
தேவாரப் பண்களும் அங்கிசைக்க
(dhevaara panngalum angisaikka)
Songs of Thevaram are being sung
மூவரும் வாழ்த்தியே கை அசைக்க
(moovarum vaazhthiye kai asaikka)
the holy Trinity wave and bless
முனிவன் பவனி வருவதைப் பார்
(munivan bavani varuvadhai paar)
Behold the sage who’s coming in procession
Summary 2
Celestials holding customary umbrellas,Thevaram songs being sung, as the holy Trinity wave and bless, the sage is in procession.
சங்கு முழங்கியே பூம் பூம் என
(sangu muzhangiye boom boom ena)
Conches are being blown
சாஸ்திர அந்தணர் ஓம் ஓம் என
(saasthira andhanar om om ena)
Priests are chanting Om
வங்கக் கடல் அலை ஆஹா என
(vanga kadal alai aahaa ena)
Even the Indian Ocean is roaring
சங்கரன் பவனி வருவதைப் பார்
(Shankaran bavani varuvadhai paar)
Behold Sivashankaran in procession
Summary 3
As the conches are being blown,priests chant Om,ocean waves roar in glee, Sivashankaran is coming in procession.
வாசலில் தோரணம் வா வா என
(vaasalil thoranam vaa vaa ena)
The decorations on the entrance are welcoming
வண்ணக் கோலங்கள் பள பளென
(vanna kolangal pala palena)
Colourful patterns on the floor are bright
வாத்திய ஓசைகள் தீம் தீம் என
(vaadhiya oasaigal dheem dheem ena)
Musical instruments make dheem dheem sound
வள்ளல் பவனி வருவதைப் பார்
(vallal bavani varuvadhai paar)
Behold the Benevolent One in procession
Summary 4
Entrance is decorated to welcome,bright colourful patterns are drawn,musical instruments are played as the Benevolent One comes in procession.
கோயில் யானை மாலை ஏந்தி வர
(koyil yaanai maalai yendhi vara)
Temple elephant comes bearing the garland
கொட்டு முழக்கங்கள் முன்னே வர
(kottu muzhakkangal munne vara)
Sound of drums come in front
ஆகாயம் பூ மழை தூவி வர
(aagaayam poo mazhai thoovi vara)
Sky’s showering rain of flowers
ஆதி சங்கரன் பவனியைப் பார்
(aadhi shankaran bavaniyai paar)
Behold Aadi Shankaran in procession
Summary 5
As the temple elephant comes bearing the garland,the drumming sounds are heard in front,as the sky showers flowers like rain, Adhi Shankara is coming in procession.
சந்திர சூரியர் முந்தி வர
(chandhira sooriyar mundhi vara)
Moon and Sun compete to come
சர்ப்பங்கள் நெளிந்து ஆடி வர
(sarppangal nelindhu aadi vara)
Snakes come in slithering dance
இந்திரன் கட்டியம் கூறி வர
(indhiran kattiyam koori vara)
Indra,king of devas comes proclaiming
எந்தை பவனி வருவதைப் பார்
(endhai bavani varuvadhai paar)
Behold My Father Shiva coming in procession
Summary 6
As Sun and the moon come along with slithering serpents and Indra,king of devas come proclaiming the praises, My Father Shiva is coming in procession.
வாயுவும் சாமரம் வீசி வர
(vaayuvum saamaram veesi vara)
Vayu deva,wind God is fanning
வருணன் பன்னீர் தெளித்து வர
(varunan panneer thelithu vara)
Varuna, God of water is sprinkling rose water
அக்கினி பந்தம் பிடித்து வர
(aggini pandham pidithu vara)
Agni,Fire God is holding the torch
ஆகாயம் மண்ணும் அழகு பெற
(aagaayam mannum azhagu pera)
The sky and earth become beautiful
Summary 7
As Vayu fans,Varuna sprinkles rose water,Agni bears the torch,the sky and earth look beautiful
வாண வேடிக்கையின் வண்ணங்களைக் கண்டு
(vaana vedikkaiyin vannangalai kandu)
Looking at the colors of the fireworks,
வானவில் தயங்கி நிற்பதைப் பார்
(vaanavil thayangi nirpadhai paar)
look how the rainbow feels shy
கான மழையைப் பொழிந்துமே நாரதன்
(gaana mazhiyai pozhindhume naaradhan)
Sage Narada showers music like rain
தானே மயங்கித் திகைப்பதைப் பார்
(thaane mayangi thigaippadhai paar)
And he himself is mesmerized by it
Summary 8
Looking at the colourful fireworks,the rainbow is hesitant and Sage Narada is self mesmerized by his musical showers
தெருவிலே மாந்தர் வரிசைகள் பார் - தம்
(theruvile maandhar varisaigal paar - tham)
Look at the people lining the streets - their
தேவை அனைத்தும் பெறுவதைப் பார்
(thevai anaiaththum peruvadhai paar)
wishes being fulfilled,behold
கருவின் மதலை அசைந்தசைந்து - இதைக்
(karuvin madhalai asaindhasaindhu - idhai)
the foetus in the womb moving - to
காண விரும்பிடும் ஆவலைப் பார்
(kaana virumbidum aavalai paar)
see this in eagerness
Summary 9
As the people inning the streets get their wishes fulfilled,even the baby in the womb moves excitedly to witness this procession.
பஞ்ச பூதங்களும் சேவை செய்ய
(panja boodhangalum sevai seyya )
All the five elements serve
பரமன் தேரில் வரும் ஆனந்தம் பார்
(paraman theril varum aanandham paar)
As Lord Shiva comes in the chariot giving joy
மஞ்சள் முகத்துப் பெண்டிர்களெல்லாம்
(manjal mugaththu pendirgalellaam)
women with turmeric smeared faces
மங்கள ஆரத்தி செய்வதைப் பார்
(mangala aarathi seivadhai paar)
perform auspicious offering of light, behold.
Summary 10
As Lord Shiva comes in procession,served by the five elements,women with turmeric smeared faces,perform the auspicious ritual of offering light in holy crimson water.
This song explains the grandeur of the procession of Sivashankar Baba,who is Lord Shiva Himself in a golden chariot and so is being served in all ways by all the devas themselves along with the other living beings.
Commentaires