Thulli thulli aadi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thulli thulli aadi varum pulli mayil velanivan
valli dheiva yaanaiyudan vandhu varam tharugubavan
thellu thamizh kavidhaiyadhan thaen suvaiyil urugubavan
velli mani chirippinile vendha manam aatrubavan
kallamillaa manaththinulle kaatchi pala tharugubavan
kaaleduththu aadi varum kaavadiyil mayangubavan
vellamena perugum anbai vaendubavarkkarulubavan
vaedhamellaam potrum vaedhaanthi Sivashankaravan
chinna chinna padhangal vaiththu sindhaiyile aadubavan
sri dheviyaal marugan sivashakthi maindhanivan
kallaana idhayangalai karkandaay maatrubavan
kaalamenum chakkaraththai kangalaale suzhatrubavan
துள்ளித் துள்ளி ஆடி வரும் புள்ளி மயில் வேலனிவன்
வள்ளி தெய்வ யானையுடன் வந்து வரம் தருகுபவன்
தெள்ளு தமிழ்க் கவிதையதன் தேன் சுவையில் உருகுபவன்
வெள்ளி மணிச் சிரிப்பினிலே வெந்த மனம் ஆற்றுபவன்
கள்ளமிலா மனத்தினுள்ளே காட்சி பல தருகுபவன்
காலெடுத்து ஆடி வரும் காவடியில் மயங்குபவன்
வெள்ளமெனப் பெருகும் அன்பை வேண்டுபவர்க்கருளுபவன்
வேதமெல்லாம் போற்றும் வேதாந்தி சிவசங்கரவன்
சின்ன சின்னப் பதங்கள் வைத்து சிந்தையிலே ஆடுபவன்
ஸ்ரீ தேவியாள் மருகன் சிவசக்தி மைந்தனிவன்
கல்லான இதயங்களைக் கற்கண்டாய் மாற்றுபவன்
காலமெனும் சக்கரத்தை கண்களால் சுழற்றுபவன்
Comments